விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்டமான முறையில் முதலீட்டாளர்கள் மாநாடு… அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு…

0
33

 

விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்டமான முறையில் முதலீட்டாளர்கள் மாநாடு… அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு…

 

தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாடு இந்தியாவில் இதுவரை நடைபெறாத அளவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள் அறிவித்துள்ளார்.

 

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் 30 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு காட்பாடியில் டெல் தொழிற்பேட்டை வளாகத்தையும், மகிமண்டலம் ஊராட்சியில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தையும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுடன் சேர்ந்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள் பார்வையிட்டார்.

 

ஆய்வுகளை முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள் “வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. அடுத்த 9 மாதத்திற்குள் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணி முடிந்துவிடும்.காட்பாடி அருகே சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் அமைப்பதற்கான முதல்கட்ட ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

 

காட்பாடியில் மிகப் பெரிய அளவில் தொழிற்சாலைகள் அமையவுள்ளது. அதே சமயம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தொழிற்பேட்டை வளாகத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாடு இந்தியாவில் இது வரை நடைபெறாத அளவிற்கு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாடு இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாநாடாக அமையும். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல முன்னணூ தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த முதலீட்டாளய்கள் மாநாடு இளைஞர்களுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 

இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக தமிழக தொழில்நுட்ப துறையில் அதிக அளவு முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் மின்சாரம் மூலமாக இயங்கும் இருசக்கர வாகனங்கள் தாயாரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். புதிய தொழில்நுட்பம் மூலமாக புதிய எரி சக்தியை பயன்படுத்தி இயங்கும் வகையில் இருசக்கர வாகனங்கள் தாயாரிக்கும் நோக்கத்தில் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு இருக்கும்” என்று கூறினார்.