இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

0
105

இனி ரயிலில் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது!! மீறி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

பொதுமக்கள் பலருக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது ஏனென்றால் ரயில் பயணம் தான் எப்பொழுதும் மிகவும் சௌகரியமாக அமையும் என்று கருதப்படுகிறது.

அந்த வகையில் கார் விமானம் போன்றவற்றில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.இவ்வாறு ரயில் பயணம் என்பது அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஒன்றாகவே அமைகின்றது.

இந்த ரயிலில் தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு என்று படுக்கை வசதிகள் கூட அமைக்கப்பட்டுள்ளது. பல சலுகைகளுடன் பொதுமக்களுக்கு வசதியாக அமைக்கப்பட்டது தான் இந்த ரயில் சேவைகள்.

இப்படி அமைந்துள்ள ரயில் சேவையில் நீங்கள் பயணிப்பது மட்டுமல்லாமல் நீங்கள் வாங்கிய பொருட்களை உங்களது வீட்டிற்கும் அல்லது தெரிந்தவருக்கோ அனுப்ப வேண்டும் என்றால் அதற்கும் இந்த ரயில் சேவை பயனுள்ளதாக அமைகின்றது.

அதாவது சொல்லப்போனால் நீங்கள் ஒரு வண்டியை வாங்கி இருக்கிறீர்கள் அது சென்னை உள்ளிட்ட ஏதாவது ஒரு மாவட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் பயணம் செய்யும்போதே அதனை எடுத்துச் செல்கின்றீர்கள் என்றால் அது பார்சல் அல்லது பொருளை மட்டும் தான் அனுப்புகிறீர்கள் என்றால் அது லக்கேஜ்.

பார்சலை நீங்கள் ரிசர்வ் செய்ய வேண்டும் என்றால் அதனை ஆன்லைனில் செய்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் www.parcel.Indiarail.gov.in என்று இணையதளத்திற்கு சென்று உங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் வரும் படிவத்தில் எந்த பொருளை எங்கு அனுப்புகிறீர்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் அதில் பதிவு செய்ய வேண்டும். இதனை பூர்த்தி செய்த பின்னர் அதில் வரப்படும் லிஸ்டில் உள்ள ட்ரெயின் ஏதாவது ஒன்றை நீங்கள் செலக்ட் செய்ய வேண்டும்.

பின்னர் வரும் படிவத்தை எடுத்துக்கொண்டு பார்சல் ஆபீஸ் க்கு சென்று படிவத்தை காட்டி அந்த பார்சலை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அப்படி அனுப்பிய பார்சலை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் 72 மணி நேரத்திற்குள் அதனை செய்து முடிக்க வேண்டும்.

சரி இப்போ வண்டியை எப்படி பார்சல் செய்வது என்று பார்ப்போம் அதற்கு முதலில் நீங்கள் வண்டியை ரிஜிஸ்டர் செய்த ஆவணம் இருக்க வேண்டும்.

பின்னர் வண்டியை முழுமையாக பேக் செய்து இருக்க வேண்டும் அதில் எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தகவல் எழுதி வைத்திருக்க வேண்டும்.

பின்னர் அவர்கள் தரும் படிவத்தில் வண்டி நிறுவனத்தின் பெயர், எண், எடை உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து தர வேண்டும். அதன் பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் உங்களது பார்சல் உரிய இடத்திற்கு சென்றடையும்.

நீங்கள் அனுப்பும் பார்சலில் ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தால் அதற்காக நீங்கள் புகார் தெரிவிக்கலாம். இதை நீங்கள் அவர்கள் தொடும் படிவத்தை பூர்த்தி செய்து எந்த இடத்தில் டேமேஜ் ஏற்பட்டுள்ளது என்பதை புகைப்படம் எடுத்து இணையதள பக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

இதன் மூலம் அதற்கான பணம் மற்றும் நீங்கள் அனுப்பியதற்கான செலவு அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் தவறான முறையில் புகாரை தெரிவித்தீர்கள் என்றால் ரயில்வேயின் சட்டத்தின் படி உங்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் கேஸ் சிலிண்டர் பட்டாசு உள்ளிட்ட வெடிக்கக் கூடிய பொருட்களை ரயிலில் ஏற்றி செல்ல அனுமதி கிடையாது. இந்த வகையில் இதற்கான கட்டணம் பொருளின் எடை மற்றும் தூரத்தை வைத்தே நிர்ணயம் செய்யப்படும்.

Previous article4 நாட்கள் போதும்!! குதிகால் வெடிப்பு 100% முழுவதும் குணமாகும்!!
Next articleஎன்எல்சி இந்திய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!