4 நாட்கள் போதும்!! குதிகால் வெடிப்பு 100% முழுவதும் குணமாகும்!!

0
45

4 நாட்கள் போதும்!! குதிகால் வெடிப்பு 100% முழுவதும் குணமாகும்!!

உடலில் அழகாக பராமரிப்பதில் இருக்கும் கவனம் பாதங்களுக்கு மட்டும் சிதறி விடுகிறது. பாதங்களில் தான் ஆரோக்கியமா ஒளிந்து இருக்கிறது. அழகு நிலையத்தில் முக அழகோடு பாத அழகு படுத்துவதற்கு பெடிக்யூர் உண்டு இதன் மூலம் பாதங்களை கடுமையாக இருந்தாலும் பாதத்தை சுத்தமாக தேய்த்து மசாஜ் மூலம் அழகாக்கி பாதங்களில் உள்ள நரம்புகளை தூண்ட தூண்டும் படி செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறார்கள். இருக்கும் உடலில் இருக்கும் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில் இருக்கிறது அந்த நரம்புகளை அவ்வபோது மசாஜ் போன்ற தூண்டப்படும் போது மனது சேர்த்து ரிலாக்ஸ் ஆகிறது. உடல் அழகை பராமரிப்பது போல் பாதத்தின் அழகையும் பராமரிக்க வேண்டும் இதற்கு அழகு நிலையங்கள் தான் தீர்வு என்பது இல்லை வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு உங்கள் பாதங்களை சுத்தம் செய்து பராமரிக்கலாம்.

 

1. பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை சாறு கலந்து குதிகாலில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும்.

2. காலையில் வெதுவெதுப்பான வெந்நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும் பின் கிளிசரின் பன்னீர் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும் வெந்நீரில் நினைத்து பாதங்களை வெடிப்புகள் உள்ள பகுதியில் அந்த கலவையை பூசி வரவேண்டும் இவ்வாறு மூன்று நாட்கள் பூசி வந்தால் பாத வெடிப்பு குறையும் பாதங்கள் மென்மையாக மாறும்.

3. பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்கள் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும் அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நினைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும்.

4. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பாத வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். தண்ணீரில் கழுவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

5. கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்ஸை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும் இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.

6. வேப்பிலை மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும் அந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். தரம் குறைவான காலணிகளை பயன்படுத்துவதால் சிலருக்கு வெடிப்பு ஏற்படும் எனவே காலனி வாங்கும் போது தரமானதா பார்த்து வாங்க வேண்டும்.

7. விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழிவினால் வெடிப்பு சரியாகிவிடும்.

8. இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன் கால்களை நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் நல்லது தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈழம் இல்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும் பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

9. கடுகு எண்ணெய் தினமும் கால் வெடிப்பில் தேய்த்து கழுவி வந்தால் சொரசொரப்பு தன்மை நீங்கி மிருதுவாகும்.

10. வெந்தயக் கீரையை அரைத்து கால்களில் பூசி பின் தேய்த்து கழுவி வந்தால் முரட்டு தன்மை போய் கால்கள் பளிச்சென்று மாறும்.

author avatar
Jeevitha