சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால் 8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!!
பெற்றோர்களின் அஜாக்கிரதையால் அநியாயமாக 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் வசித்து வருபவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்குகடந்த அழகிய 8 மாதத்திற்கு முன்பு தான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு சானித்யா என பெயர் சூட்டி ஆசையாக சீராட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் பெற்றோர்கள் செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர். அதன் பின்னர் சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்த தம்பதியினர், பிளக்கில் செருகி இருந்த சார்ஜர் சொருகி உள்ள சுவிட்சை அணைக்காமல் விட்டுள்ளனர்.
இதையடுத்து குழந்தை தவழ்ந்து சென்று சார்ஜர் வயரை பிடித்து இழுத்து விளையாடி கொண்டிருந்தாள். அதன் பின்னர் அதை வாயில் வைத்து கடித்து உள்ளது. அப்போது திடீரென மின்சாரம் குழந்தையை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த குழந்தையை வைத்துக் கொண்டு சந்தோஷ் மற்றும் அவரது மனைவி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது விசாரணையில் பிளக்கில் உள்ள செல்போன் சார்ஜர் வயரை அந்த தம்பதி அணிக்கமால் விட்டுள்ளனர். அப்போது அதை குழந்தை வாயில் வைத்து விளையாடியதும், அதன் காரணமாக மின்சாரம் தாக்கியதில் அந்த குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஜாக்கிரதையினால் 8 மாத குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் பெற்றோரின் கவனக்குறைவால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. எனவே பெற்றோர்கள் செல்போனில் சார்ஜ் நிரம்பியதும் வயரை அனைத்து வைக்க வேண்டும் அல்லது கழற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.