மக்களே!! வந்துவிட்டது புதிய கேஸ் சிலிண்டர் “அயன் பாக்ஸ்” இனி ஒரே ஜாலி தான்!!

Photo of author

By CineDesk

மக்களே!! வந்துவிட்டது புதிய கேஸ் சிலிண்டர் “அயன் பாக்ஸ்” இனி ஒரே ஜாலி தான்!!

சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருவதை அடுத்து அதன் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எல்பிஜி நிறுவனம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது பிரதமர் அறிமுகப்படுத்திய யோஜனா திட்டத்தின் படி பயனாளிகளுக்கு கேஸ் அடுப்பு மற்றும் முதலாவது சிலிண்டர் இரண்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் பதினெட்டு வயதிற்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும். இவர் இந்திய குடிமகனாகவும், இதற்கு முன்பாக குடும்ப உறுப்பினர்களின் பெயரில் எந்த ஒரு எல்பிஜி கணக்கும் இருக்க கூடாது.

இவர்களது விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான சிலிண்டர்களுக்கு இணைப்புகளை வழங்குவார்கள்.

தற்போது இந்திய எண்ணெய் நிறுவமானது, குறைவான செலவில் அதிகளவு பலனை தரக்கூடிய புதிய எல்பிஜி கேஸ் சிலிண்டரில் இயங்கும் அயன் பாக்ஸை அறிமுகப்படுத்த உள்ளது.

இதன் முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த கேஸ் சிலிண்டரில் இயங்கும் அயன் பாக்ஸ்களை இந்திய எண்ணெய் நிறுவனம் கொண்டு வர உள்ளது.

இது இரண்டே நிமிடங்களில் நன்கு சூடாகிவிடும். இதனால் நமக்கு எந்த ஒரு நுரையீரல் பாதிப்பும் ஏற்படாது என்று கூறி வருகிறார்கள். இந்த சேவை விரைவில் வர உள்ளது என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் எழுந்து வருகிறது.

இந்த அயன் பாக்ஸ் 2018  ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் விலை அதிகமாக இருந்து, கரண்ட் பில்லும் அதிகமாக வந்ததால் பொது மக்கள் இதை புறக்கணித்து விட்டனர்.

எனவே, தற்போது விலை மிகவும் குறைந்து அதாவது, ஒரு மணி நேரத்திற்கு இது ஆன் செய்து அயன் செய்யும் போது வெறும் ஐம்பது பைசா மட்டுமே செலவு ஆகும். எனவே, மீண்டும் இந்த அயன் பாக்ஸ் நடைமுறைக்கு வர உள்ளது. சலவைத் தொழிளார்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமையப்போகிறது.