நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! இளைஞர்களே மிஸ் பண்ணீடாதீங்க!!
தமிழகம் முழுவதும் ஏராளமான இளைஞர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். சிலர் படித்த படிப்பிற்கு தகுந்த வேலையை செய்யாமல் கிடைத்த வேலையை செய்து கொண்டு வருகிறார்கள்.
எனவே, இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசானது அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
இதில் லட்சக்கணக்கானோர் பயனடைந்தும் வருகின்றனர். அந்த வகையில், தற்போது கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு பொது மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜிஎன் மில்ஸ் பகுதியில் அமைந்துள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அரசு நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருக்கிறது. மேலும், இதில் 257 நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் மொத்தம் பதினைந்து ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது.
இதன் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுமாறு கோவை மாவட்டத்தின் கலெக்டர் கூறி இருக்கிறார்.
இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் அனைத்தும் முழுக்க முழுக்க வேலை இல்லாமல் சிரமப்படும் நபர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் நடைபெறுகிறது என்று தமிழக அரசு கூறி உள்ளது.
இதேப்போல ஒவ்வொரு வாரமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.