தொடர்ந்து சரியும் தக்காளி விலை!! இன்று எவ்வளவு தெரியுமா!!
சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது, அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை பன் மடங்கு அதிகரித்து வருகிறது. தங்கத்தை விட தற்போது தக்காளியை தான் அனைவரும் பாதுகாத்து வருகின்றனர்.
சென்ற வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் இருநூறுக்கு மேல் விற்கப்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினம்தோறும் ஏராளமான நடைமுறைகளை செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் கொண்டு வரப்பட்டது தான் ரேஷன் கடைகளில் தக்காளி வழங்கும் திட்டம்.
இத்திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக துவங்கப்பட்டு தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு உச்சம் தொடும் தக்காளி விலையானது இரண்டு நாட்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளியின் விலை கோயம்பேடு சந்தையில் ரூபாய் 120 விற்கப்பட்டு வந்தது.
இன்று மேலும் இருபது ரூபாய் குறைந்து ரூபாய் 100 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதை பற்றி கூறிய விவசாயிகள் கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக விலை குறைகிறது என்று கூறி உள்ளனர்.
இதனால் பொது மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர். அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட மழையின் காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிகப்பட்ட்து. எனவே, இனி அந்த பிரச்சனை இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.