தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை!!

0
124

 

தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டி யானை… வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை …

 

வால்பாறை அருகே தும்பிக்கையை இழந்து நடமாடும் குட்டியானையை கேரள வனத்துறையினர் மீட்டு பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி ரோட்டில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக முகாம் இட்டுள்ளன. இதில் வால்பாறை-சாலக்குடி ரோட்டில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே 5 யானைகள் ஒரு குட்டியுடன் முகாம் இட்டுள்ளது.

 

5 யானைகள் கொண்ட இந்த கூட்டத்தில் தும்பிக்கையை இழந்து ஒரு குட்டி யானை ஒன்று உலா வந்து கொண்டிருக்கின்றது. 3 வயதுள்ள இந்த குட்டி யானைக்கு தாய் யானை உணவு ஊட்டி வருகின்றது. மேலும் கேரளா வனத்துறையினர் இந்த குட்டி யானையை கண்காணித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

 

இது தொடர்பாக கேரளா வனத்துறையினர் “அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஏழாற்றுமுகம் வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் குட்டி யானை ஒன்று இருப்பதை ஜனவரி மாதம் கண்டறிந்தோம். குட்டி யானை தானாகவே உணவு உட்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் குட்டி யானைக்கு தாய் யானைதான் உணவு ஊட்டுகின்றது.

 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிக்கி இந்த குட்டி யானை தும்பிக்கையை இழந்திருக்கலாம். தும்பிக்கையை இழந்து சுற்றித் திரியும் குட்டி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று வனத்துறையினர் கூறினர்.

 

தும்பிக்கையை இழந்த குட்டி யானையை மீட்டு வனத்துறையினர் பராமரித்து பாதுகாத்து வளக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.