மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை!! அதிகாரபூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!

0
195
Scholarship for disabled students!! Officially announced by the Government of Tamil Nadu!!
Scholarship for disabled students!! Officially announced by the Government of Tamil Nadu!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை!! அதிகாரபூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!

அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மதிய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது.

அந்த வகையில் தமிழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித்தொகை மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தற்பொழுது நடப்பு கல்வியாண்டிற்கான உதவித்தொகையை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.எனவே இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2000 ரூபாயும் ,6-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6000 ரூபாயும் ,9-10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 8000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.12000 மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு ரூ.14000 வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் இந்த உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தித்தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.அதனால் இந்த உதவித்தொகையை பெரும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் தங்களுக்கு அருகில் உள்ள இ- சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்  மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் விதமாக அவர்களை அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகின்றது.

Previous articleகணினி மயமாக்கப்படும் “டாஸ்மாக் கடைகள்”!! இனி மதுபானம் விலை குறையுமா??
Next articleவருமான வரித்துறை ஊழியர்களுக்கு வைத்த “செக்”!! இனி யாரும் ஏமாற்ற முடியாது!!