இந்த 3 பொருள் போதும்!! 99% முழங்கால் மூட்டு வலி வேரில் இருந்து குணமாகும்!!
முழங்கால் மூட்டு அல்லது முழங்கால் மூட்டைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் இருந்து முழங்கால் வலி ஏற்படுகிறது.
அதிகப்படியான உடல் செயல்பாடு, சுளுக்கு, விகாரங்கள், ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது அல்லது நீண்ட நேரத்திற்கு ஒரே நிலையில் இருப்பது போன்ற பல காரணிகள் முழங்கால் வலிக்கு காரணமாகின்றன.
முதுமையில் முழங்கால் மூட்டு தேய்மானம் காரணமாகவும் முழங்கால் வலி ஏற்படலாம்.
முழங்கால் வலியின் அறிகுறிகள் யாவை?
1: வலி மற்றும் விறைப்பு.
2: வீக்கம் மற்றும் சிவத்தல்.
3: தொடும்போது வெப்பம்.
4: உறுதியற்ற தன்மை மற்றும் முழங்கால்களை நேராக்க இயலாமை.
5: முழங்கால் மூட்டுகளை நகர்த்தும்போது முணுமுணுப்பு சத்தம்.
எனவே இது போன்ற வலிகளை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய சிறிய வைத்தியம்.
தேவையான பொருட்கள்:
சுக்கு
வெந்தயம்
இது வாதத்திற்கு ரொம்ப நல்லது. வெந்தயம் சுக்கு இரண்டுமே மூட்டு வலிகளுக்கு ரொம்ப நல்லது.
ஓமம்
இது நம் உடலில் உள்ள வாதத்தை கட்டுப்படுத்தும். முழங்கால் மூட்டுகளில் ஏற்படக்கூடிய வீக்கத்தை கட்டுப்படுத்தும்.
நாட்டு சக்கரை
உடம்பில் உள்ள வாதம் கபம் இதனை குறைப்பதற்கு உதவும். ரத்த சோகை சோர்வு பலவீனத்தை குறைக்கும்.
செய்முறை:
1: ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் ஓமம் மற்றும் ஒரு துண்டு சுக்கு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து குடித்து வந்தால் போதும். இதனுடன் நாட்டுச்சக்கரை சேர்த்துக் குடிக்கலாம் அதுவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாட்டுச்சர்க்கரை தவிர்த்து விடலாம்.
காலையில் உணவு உண்ணும் முன்பு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு இதனை குடிக்க வேண்டும் தொடர்ந்து 11 நாட்கள் இதனை குடித்து வரவேண்டும்.
இதனை குடிப்பதனால் நம் உடம்பில் உள்ள கெட்ட வாய்வு வெளியேறும் மூட்டு வலி மூட்டுகளில் உள்ள சத்தம் அனைத்தும் சரியாகிவிடும்.
நாம் சாப்பிடும் உணவுகளில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுக்க வேண்டும். விட்டமின் D காக காலையில் எழுந்தவுடன் சூரியன் அரை மணி நேரம் உட்கார வேண்டும்.
கால்சியம் அதிகமாக வேண்டுமென்றால் பால், கீரை, வெண்டைக்காய் இது போன்ற உணவுகளை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஊறவைத்த பாதாம் நான்கை தினமும் சாப்பிட வேண்டும்.
முக்கியமாக இந்த 11 நாட்கள் இதனை குடிக்கும் பொழுது புளிப்பான உணவுகள் மற்றும் குளிர்ச்சியான உணவுகளை நாம் தவிர்த்து விட வேண்டும். அதாவது மாலை 5 மணிக்கு மேல் குளிர்ச்சியான உணவுகளை நாம் தவிர்ப்பது நல்லது.