இஎம்ஐ கட்டச்சொல்லி செல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறதா.? நீங்கள் இதை செய்யுங்கள் போதும்.!!

0
144

இஎம்ஐ கட்டச்சொல்லி செல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறதா.? நீங்கள் இதை செய்யுங்கள் போதும்.!!

வங்கி அல்லது தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடனுக்காகவோ அல்லது மற்ற தவணைகளுக்கோ இஎம்ஐ கட்டச் சொல்லி உங்கள் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்தால் அதனை உடனடியாக கட்ட வேண்டுமா அல்லது அரசு அறிவித்த மூன்று மாதங்களுக்கு பிறகு கட்டலாமா என்கிற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

வங்கியில் வாங்கிய கடனை 3 மாதங்களுக்கு பிறகு வட்டி இல்லாமல் செலுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்லமுடியாத நிலையும், ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இந்தியன் வங்கி சார்ப்பில் நடமாடும் ஏடிஎம் மக்கள் தேவைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இடங்களில் பொதுமக்கள் பணத்தை எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் கூறினார்.

மேலும், ரிசர்வ் வங்கி அறிவித்தது போல் பொது மக்கள் தங்களின் தவணைத் தொகையை 3 மாதங்களுக்கு கட்டத் தேவையில்லை, கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிறகு கட்டலாம் என்று கூறினார். இந்த விதிமுறையானது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும், மேலும் மூன்று மாதம் கழித்து கட்டப்படும் தவணை தொகைகளுக்கு வட்டி மற்றும் இதர பிடித்தம் இருக்காது என்றும், மக்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதிய தொகை மற்ற சலுகை பணமும் அவரவர் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என்று தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கிய நபர்களுக்கு இஎம்ஐ கட்டச்சொல்லி அந்தந்த நிறுவனங்கள் குறுஞ்செய்தி (SMS) அனுப்பி வருகின்றன. இந்நிலையில் அரசு அறிவித்த மூன்றுமாத கால அவகாசம் தனியார் நிறுவனங்களுக்கு பொருந்துமா என்ற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவனங்கள் சிறிய விளக்கத்தை கூறியுள்ளன.

உங்களது மாத தவணையை கட்ட முடிந்தால் தற்போது கட்டிவிடுங்கள் பணம் இல்லாத நபர்கள் மூன்று மாதம் கழித்து கட்டலாம் ஆனால், 3 மாத கால அவகாசத்திற்கான வட்டி வசூலிக்கப்படும் என்று தனியார் நிறுவனங்கள் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகையால் கையில் பணம் வைத்திருக்கும் நபர்கள் வங்கிகணக்கு மூலமோ அல்லது ஆன்லைன் மூலமோ கட்டிவிடுவது நல்லது. மூன்று மாதம் கழித்து தவணை கட்ட நினைப்பவர்கள் வட்டியோடு கட்ட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Previous articleரிசர்வ் வங்கி அறிவித்த 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது
Next articleகொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர்