இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் கேன்சர்!! இதையெல்லாம் செய்து எமனை அழைக்காதீர்கள் மருத்துவர்கள் எச்சரிக்கை!! 

0
114

இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் கேன்சர்!! இதையெல்லாம் செய்து எமனை அழைக்காதீர்கள் மருத்துவர்கள் எச்சரிக்கை!! 

தற்போது புற்றுநோயால் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவ ஆய்வு ஒன்று பகீர் தகவல் கொடுத்துள்ளது.

புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகில் பெரும்பான்மையான மக்களை பாதிக்கும் உயிர் கொல்லி நோயாக புற்றுநோய் உள்ளது. புற்று நோய்க்கு பல்வேறு விதங்களில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்ட போதிலும், பல விதங்களில் உருவெடுக்கும் புற்று நோய்க்கு நிரந்தர தீர்வு மருத்துவ சிகிச்சை இல்லை என்பதே உண்மை.

தற்பொழுது 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளிவந்துள்ளது.

1990 ஆண்டுகளுக்குப் பிறகு மரபணுவில் மனிதர்களில் மாற்றம் இல்லை என்றாலும் வாழ்க்கை முறையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களை சுமார் 14 வகையான புற்றுநோய்கள் தாக்குவதாக தெரியவந்துள்ளது. அதில் 8-க்கும் அதிகமான புற்றுநோய் வயிறு மற்றும் ஜீரண மண்டலம் சம்பந்தமானது என்பது அதிர வைக்கிறது.

2000-2019 ஆண்டு கால கட்டத்தில் இந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் அதற்கு முன்பு இருந்ததைவிட 46 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல

** மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் – 13%

** வயிறு சம்பந்தப்பட்ட புற்றுநோய் பாதிப்பு – 27%  அதிகரித்துள்ளது.

இதுபோன்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணிகள் என்ன என்பது மருத்துவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மர்மமாகவே உள்ளது. ஆனால் உணவுமுறை,பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் போன்றவையே இளம் வயதினர் இடையே புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

புற்று நோய்க்கு வழிவகை செய்யும் பழக்கங்கள்

* பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள்.

* உடல் பருமன்

* நமது உடலில் தங்கி இருக்கும் நுண்ணுயிரி ஏற்படுத்தும் மாற்றம்.

* சரியான தூக்கம் இன்மை.

* அதிகமாக ஏற்படும் மன அழுத்தம்.

போன்றவையே புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களாக பெரும்பாலான மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

புற்றுநோயை தவிர்க்கும் வழிமுறைகள்,

1. அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ள வேண்டும்.

2. தினமும் உடற்பயிற்சி.

3. புகைப்பிடித்தலை தவிர்ப்பது.

4. மது அருந்துவதை தவிர்ப்பது.

போன்றவை புற்றுநோய் வரும் பாதிப்புகளை பெருமளவு தவிர்க்க கூடும்.

புற்றுநோய் எப்போது கண்டறியலாம்,

1. பெருங்குடல் புற்றுநோய்- 45 வயது

2. மார்பக புற்றுநோய்- 40 வயது

3. கர்ப்பப்பை புற்றுநோய் -25 வயது.

போன்ற வயதுகளில் பரிசோதனை மூலம் இந்த வகை புற்றுநோயை கண்டறியலாம். அதேபோல் தோல் புற்றுநோயையும் பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம்.

அதேபோல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே பரிசோதனை மூலம் கண்டறிந்தால் உயிரை குடிக்கும் முன் கட்டாயம் காப்பாற்றி விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Previous articleசாப்பிடும் முன் இதனை ஒரு கிளாஸ் மட்டும் குடியுங்கள்!! ஆயுசுக்கும் சர்க்கரை வியாதி உங்களை நெருங்காது!!
Next articleஇந்தியர்களை கவர பிரான்ஸ் அதிரடி திட்டம்… எளிதாக வெளிநாடு செல்ல அருமையான வாய்ப்பு!!