பிரபல சமூக வலைதளத்தில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய வீரர் விராட் கோலி!! அடேங்கப்பா இவ்வளவா??
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமூக வலைத்தளத்தில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் முக்கியமான வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. இவர் பல்வேறு சாதனைகளை கிரிக்கெட் போட்டிகளில் படைத்துள்ளார். இவரது பேட்டிங் மற்றும் ஆடுகளத்தில் செய்யும் ஆக்ரோஷமான செயல்பாடுகளினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார்.
இவர் கிரிக்கெட் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அதிக நபர்கள் பின் தொடரும் இந்தியர் மகத்தான சாதனையை படைத்துள்ளார். இதுவரை இன்ஸ்டாகிராமில் கோலியை சுமார் 256 மில்லியன் நபர்கள் பின் தொடர்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிடப்படும் பதிவுகளால் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் குறித்த அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில் முதல் இரண்டு இடங்களில் கால்பந்து நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனஸ் மெர்சி ஆகிய இருவரும் உள்ளனர்.
ஆனால் இந்தியர்கள் தரப்பில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒருவர் மட்டும் 14- வது இடம் பிடித்துள்ளார். முதல் 20 இடங்களுக்குள் வந்த ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றவரும் இவரே. இதனால் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
மேலும் விராட் கோலி பதிவிடும் பதிவிற்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர் பதிவிடும் ஒரு பதிவிற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.11.45 கோடி வருமானம் பெறுவதாக தகவல் வெளியானது.
அதேபோல பிற நிறுவனங்களை விளம்பரப்படுத்தும் பதிவிற்கு அவருக்கு ரூ.14 கோடி கிடைக்கிறது. இந்த அறிக்கையில் முதலிடத்தில் உள்ள ரொனால்டோ ஒரு பதிவிற்கு ரூ.26.75 கோடி வருமானம் பெறுகிறார். மெஸ்ஸி ரூ.21.49 கோடி பெறுகிறார்.
விராட் கோலிக்கு அடுத்ததாக இந்திய தரப்பில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 29 -வது இடத்தில் உள்ளார். அவர் தனது ஒரு பதிவிற்கு ரூ.4.40 கோடி வருமானம் பெறுகிறார்.