ஏப்ரல் 5 ஆம் தேதி மின் விளக்குகளை அணையுங்கள்! மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

0
140

ஏப்ரல் 5 ஆம் தேதி மின் விளக்குகளை அணையுங்கள்! மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

கொரோனா தொற்று உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இதுவரை 53 பேர் இதனால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி நேரலை வீடியோ மூலம் மக்களை சந்தித்து முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது;

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுத்து இருப்பதும் இந்த சவாலை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட்டதற்கு நன்றி. அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்கும் அனைவருக்கும் நன்றி. இந்திய மக்களின் ஊரடங்கு உத்தரவு உலகத்திற்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது.

அவரவர் வீட்டில் இருந்து ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனா வை கட்டுப்படுத்த முடியும். தேசிய ஊரடங்கு உத்தரவால் 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் பிரிவு இல்லாமல் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை உங்கள் மின் விளக்கை அணையுங்கள். வீட்டில் இருக்கும் 4 மூலைகளிலும் வெளிச்சத்தை தரும் டார்ச் விளக்கு, அகல் விளக்கு, செல்லபோன் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு முன்பு கொரோனாவிற்கு எதிராக போராடிவரும் மருத்துவர்களுக்கு வீட்டில் இருந்தே கைதட்டி உற்சாகம் தருமாறு மோடி கூறியதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Previous articleஇளம்பெண்ணை அடைய ஈபி ஆபிசர் செய்த காரியம்! கணவன் கொடுத்த ஷாக் ட்ரீட்மெட்! அதிர்ந்து போன காவல்துறை..!!
Next articleகொரோனா உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்ட தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் செவிலியர்களிடம் அநாகரிகமான நடவடிக்கை!