கேரளாவில் அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : அடுத்து என்ன நடக்கும்?

Photo of author

By Parthipan K

கேரளாவில் அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : அடுத்து என்ன நடக்கும்?

Parthipan K

Updated on:

கேரளாவில் அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : அடுத்து என்ன நடக்கும்?

கேரள மாநிலத்தில் கையில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் மலைப்பகுதிகளில் உலா வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சண்டிஸ்கர், பஞ்சாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வட மாநிலங்களில்  மாவோயிஸ்டுகள்,நக்ஸலைட்கள் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களின் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது.  தென் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறைவு தான் இருப்பினும் தற்போது அதிகரித்து உள்ளதாக உளவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கர்நாடகா, கேரள மாநிலங்களில் உள்ள மலைப்பகுதிகளில்  மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள மலைப்பகுதிகளில் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மாவோயிஸ்டுகள் இயக்கத்தினர்  உலா வரும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது கீழ்ப்பள்ளி. இது ஒரு மலை கிராமம் ஆகும். இப்பகுதியில் நடமாட்டம்  அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அய்யன்குன்னு பகுதியில் திடீரென மாவோயிஸ்டுகள் வந்தனர். 11 பேர் அடங்கிய அந்தக் குழுவில் 3 பெண்களும் இருந்தனர். இவர்கள் துப்பாக்கிகளுடன் திடீரென்று அப்பகுதியில் ஊர்வலம் நடத்தினர். அவர்களுக்கு தேவையான பொருட்களை மலைப்பாதைகள் வழியாக வந்து வாங்கி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது அவர்கள் ஒன்றிய அரசாங்கமான பாஜக அரசுக்கு எதிராக கோசமிட்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து விடுவதால் கேரள மாநிலம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கர தாக்குதல் நடக்குமோ என்ற அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது