அமெரிக்காவில் பரபரப்பு..LGBTQ கொடியால் பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்!!
சமூகத்தில் தன்பால் ஈர்ப்பு உள்ள ஆண்,பெண் மற்றும் உடல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு ஒரு ஆண் பெண்ணாகவோ,ஒரு பெண் ஆணாகவோ மாறுவோர்களை இயற்கைக்கு முரணானவர்கள் என்ற பார்வை அதிகளவில் உள்ளது.ஏதோ அவர்கள் தவறு செய்து விட்டார்கள் என்று அவர்களை மதிக்காமல் தரக்குறைவாக பேசும் நபர்கள் அதிகம் உள்ளனர்.இதில் கசப்பான உண்மை என்னவென்றால் LGBTQ நபர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்களே ஏற்றுக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற்றி விடுகின்றனர் என்பது தான்.இதனால் அவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.சமீபகாலமாக LGBTQ நபர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் LGBTQ விவகாரத்தில் தற்பொழுது அமெரிக்காவில் ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள சான் பெர்னார்டினோ கவுன்ட்டி பகுதியில் லாரா ஆன் கார்லேடன் (66) என்ற வயதான பெண்மணி சிறிய துணிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.இவர் தனது கடை வாசலின் முன் LGBTQ சமூகத்தை ஆதரிக்கும் விதமாக வானவில் நிறக் கொடியை ஏற்றி இருக்கிறார்.இந்நிலையில் அந்த கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடை வாசலில் உள்ள LGBTQ கொடியை அகற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற தொடங்கியதை அடுத்து அந்த மர்ம நபர் கோபத்தில் தன் சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து லாராவை நோக்கி சுட்டுள்ளார்.இதனால் லாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பியோடிய மர்ம நபரை கையும் களவுமாக பிடித்தனர்.இந்நிலையில் அந்நபர் போலீசாரிடம் இருந்து தப்பி செல்வதற்காக அவர்களை நோக்கி துப்பாக்கியில் சுட முயன்றுள்ளார்.இதனால் போலீசார் அந்நபரை திருப்பிச் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சான் பெர்னார்டினோ கவுன்ட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் LGBTQயின் கொடியை பறக்கவிட்டதால் ஒரு பெண் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுட பட்ட பெண்மணி LGBTQ சமூகத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து,அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்று சொல்லப்படுகின்றது.
LGBTQ அர்த்தம்
Lesbian,Gay,Bisexual,Transgender,Queer என்று அர்த்தம்.’லெஸ்பியன்’ என்பதற்கு ஒரு பெண்ணிற்கு இன்னொரு பெண் மீது காதல் ஏற்பட்டு உடல் ரீதியாக உறவு கொண்டிருப்பது என்று அர்த்தம்.’கே’ என்பதற்கு ஒரு ஆணிற்கு இன்னொரு ஆண் மீது ஏற்படும் காதல் ஏற்பட்டு உடல் ரீதியாக உறவு கொண்டிருப்பது என்று அர்த்தம்.’இருபால் உறவு’ என்றால் ஒரு பாலினத்தை சேர்ந்தவர் அதே பாலினத்தை சேர்ந்தவருடனும் எதிர் பாலினத்தை சேர்ந்தவருடனும் காதல் செய்து உடல் ரீதியாக உறவு கொண்டிருப்பது ஆகும்.’மூன்றாம் பாலினத்தவர்’ என்றால் பிறப்பில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்து வளரும் போது தன் பாலினத்தில் இருந்து மாறுபட்டு காணப்படுவார்கள்.இதில் ‘Queer’ என்பது மேலே உள்ள அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் ஆகும்.