தமிழக்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சி அமமுக தான்-டிடிவி தினகரன் பேச்சு!!

0
43

தமிழக்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சி அமமுக தான்-டிடிவி தினகரன் பேச்சு!!

 

தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

 

இந்நிலையில் தற்பொழுது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் பேசியது;

 

மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட ஆடம்பர மாநாட்டால் எந்த ஒரு பயனும் இல்லை.இது ஒரு வகையான விளம்பரம் தான்.கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக தலைக்கு ரூ.1000 பணம் கொடுத்து கூட்டி வந்து மாநாடு நடத்தி உள்ளனர்.இது எழுச்சி மாநாடு அல்ல வீழ்ச்சி மாநாடு ஆகும்.நேற்று நடைபெற்ற மாநாட்டில் அதிகபட்சம் 2.50 லட்சம் பேர் தான் வந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது.ஆனால் எடப்பாடி பழனிசாமி சுமார் 15,00,000 பேர் மாநாட்டில் கலந்து கொண்டனர் என்று புரளியை கிளப்பியுள்ளார்.

 

மேலும் சசிகலா அவர்களின் காலை பிடித்து முதல்வர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சி நீடிக்க காரணமாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு துரோகம் செய்துள்ளார்.இதனால் அவருக்கு துரோகத் தமிழர் என்ற பட்டம் சரியாக இருக்கும்.அந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சி தமிழர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளதால் ‘புரட்சி’ என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டது.

 

மேலும் தமிழகத்தை ஆளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதெல்லாம் நினைத்து பார்த்தால் காமெடியாக இருக்கின்றது.தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு வெற்றி பெற்ற பிறகு ஒரு பேச்சு என்று மாறி மாறி தனது நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.திமுக ஆட்சி வருவதற்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார் ஸ்டாலின்.ஆட்சி பொறுப்பேற்ற உடன் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்து போடப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றி திரு.ஸ்டாலின் முதல்வர் ஆனார்.ஆனால் தற்பொழுது அவரின் கொடூர செயலை பார்த்து இவருக்கு ஆட்சி பொறுப்பு கொடுத்து தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் மக்களின் மனதில் தோன்ற ஆரமித்து விட்டது.எங்களை பொறுத்தவரை தமிழக முதல்வர் ஸ்டாலினும்,எடப்பாடி பழனிசாமியும் எந்த வேற்றுமை இல்லாமல் ஹிட்லரின் 2 சகோதரர்கள் போல் தான் செயல் படுகிறார்கள்.

 

மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று முடிவு எடுக்க படவில்லை.கூட்டணி இல்லாவிட்டலும் அமமுக தனித்து போட்டியிடும்.ஒருவேளை கூட்டணி அமையும் பட்சத்தில் தேசிய கட்சி தலைமையில் தேர்தலை சந்திக்கலாம் என்று முடிவெடுத்து உள்ளோம்.பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் அமமுக இணையுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும்.அமமுகவை பொறுத்தவரை திமுக என்ற தீய சக்தி எந்த விதத்திலும் வெற்றி பெற்று விடக்கூடாது.திமுக மற்றும் அதிமுக என்ற இந்த இரண்டு கட்சிக்கு மாற்றாக அமமுகவை தமிழக மக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறினார்.