மூட்டுவலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை துவையல் : சுவையாக செய்வது எப்படி?

0
66

 

மூட்டுவலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை துவையல் : சுவையாக செய்வது எப்படி?

 

முடக்கத்தான் கீரை பயன்கள் :

 

முடக்கத்தான கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. நம் முன்னோர்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கீரை பயன்படுத்தியுள்ளனர்.

 

மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாக இந்த கீரை பயன்படுகிறது. இந்த கீரையில் துவையல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கம்.

 

சரி…. எப்படி முடக்கத்தான் கீரை துவையல் செய்யலாம் என்று பார்ப்போம் –

 

தேவையான பொருட்கள் :

 

முடக்கத்தான் – ஒரு கட்டு

மிளகு – 1 ஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 2 ஸ்பூன்

உளுந்து – 2 ஸ்பூன்

பெருங்காயத் தூள் – சிறிதளவு

புளி – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 12

இஞ்சி – சிறிய துண்டு

சீரகம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பூண்டு – 20 பல்

கறிவேப்பிலை – சிறிதளவு

 

செய்முறை :

 

முதலில் முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

 

பிறகு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில், சீரகம், மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர், முடக்கத்தான் கீரையை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வாசம் போகும் வரை நன்றாக வதங்கியதும் நன்றாக ஆற விட வேண்டும்.

 

ஆறியதும் ஒரு மிக்சியில் வதக்கிய முடக்கத்தான் கலவையை போட்டு, அதில் உப்பு, சிறிது புளி சேர்த்து நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்தது அதில், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் அரைத்து வைத்து விழுதை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான முடக்கத்தான் கீரை துவையல் ரெடி.

 

குறிப்பு :

 

வாரத்திற்கு 3 முறை இந்த முடக்கத்தான் கீரை துவையலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, கை, கால் வலி அனைத்தும் குணமடையும்.