தினமும் ஊறவைத்த வெந்தய நீரை குடித்து வந்தால் இவ்வளவு நன்மை கிடைக்குமா? இது தெரியாம போச்சே !

0
119

தினமும் ஊறவைத்த வெந்தய நீரை குடித்து வந்தால் இவ்வளவு நன்மை கிடைக்குமா? இது தெரியாம போச்சே….

சிறிய கடுகு வடிவில் காணப்படும் வெந்தயத்தில் பல மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளன. வெந்தயத்தின் இலை முதல் விதை வரை மனித உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

மேலும், வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து உட்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. மேலும், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் உள்ளன.

தினமும் வெந்தயத்தை ஊற வைத்து அந்த நீரை குடித்து வந்தால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? வாங்க பார்ப்போம்

இதய நோய்:

தினமும் ஊறவைத்த வெந்தய நீரை குடித்து வந்தால், வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் இதய நோய் வராமல் தடுக்கும்.

கெட்ட கொழுப்பு:

தினமும் ஊறவைத்த வெந்தய நீரை குடித்து வந்தால், நம் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவி செய்யும்.

சர்க்கரை நோய்:

தினமும் ஊறவைத்த வெந்தய நீரை குடித்து வந்தால், வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டச் செய்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

மலச்சிக்கல்:

தினமும் ஊறவைத்த வெந்தய நீரை குடித்து வந்தால், வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை குணமாக்கும்.

செரிமான பிரச்சனைகள்:

தினமும் ஊறவைத்த வெந்தய நீரை குடித்து வந்தால், வெந்தயத்தில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து செரிமான பிரச்சனைகள் மற்றும் அல்சரை குணப்படுத்தும்.

உடல் சூடு நீங்க:

தினமும் ஊறவைத்த வெந்தய நீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் சூடு தணியும்.

உடல் எடை குறைக்க:

தினமும் ஊறவைத்த வெந்தய நீரை குடித்து வந்தால், கிடுகிடுவென எடையை குறைய ஆரம்பிக்கும்.

மாதவிடாய் பிரச்சினைக்கு:

தினமும் ஊறவைத்த வெந்தய நீரை குடித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினை சரியாகும்.

Previous articleவக்கிரமடையும் புதன் பகவான் : எந்தெந்த ராசிகளுக்கெல்லாம் துன்பம் ஏற்படப்போகுதுன்னு தெரியுமா?
Next articleஊரே மணக்கும் செட்டிநாடு மட்டன் கறி குழம்பு : சுவையாக செய்வது எப்படி?