வெயிலால் உதடு பாதிப்பு அடைகின்றதா.. வெயிலில் இருந்து உதட்டை பாதுகாக்க இதை பண்ணுங்க !!

0
120

 

வெயிலால் உதடு பாதிப்பு அடைகின்றதா.. வெயிலில் இருந்து உதட்டை பாதுகாக்க இதை பண்ணுங்க…

 

வெயில் காரணத்தினால் உதட்டுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்புகளில் இருந்து உதட்டை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது பற்றி இந்த பதிவின்.மூலம் தெரிந்து கொள்வோம்.

 

வெயிலில் அதிக நேரம் நிற்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இருந்தாலும் காலை வெயில் மட்டுமே உடலுக்கு நல்லது. மேலும் வெயில் காலங்களில் வெளியே செல்லும் பொழுது நம் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது.

 

நமது உதட்டில் உள்ள தோல் அதிக ரத்த நாளங்களை கொண்டது. இதனால் தான் நம்முடைய உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கின்றது. வெயிலில் அதிகம் செல்வதால் உதட்டில் பல பாதிப்புகள் ஏற்படும். உதடு வறட்சி ஏற்படும். உதட்டில் வெடிப்புகள் ஏற்படும். நாம் இந்த பதிவில் வெயிலால் உதட்டில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

வெயிலில் இருந்து உதட்டை பாதுக்காக சில வழிமுறைகள்…

 

* நம் உதடுகளை வெயிலில் இருந்து பாதுகாக்க முதலில் உதடுகளில் உள்ள சூடான உணர்வை குறைக்க வைண்டும். இதற்கு துணியை தண்ணீரில் நினைத்து உதடுகளை துடைக்க வேண்டும்.

 

* இதற்கு சிறந்த ஒரு பொருள் கற்றாழை ஜெல் ஆகும். கற்றாழை ஜெல் சூரிய ஒளிகளால் ஏற்படும் வலிகளை குறைக்க உதவும். சூரிய ஒளியில் சூரிய வெப்பத்தில் இருந்து நம் உதட்டை பாதுகாக்க இந்த கற்றாழை ஜெல்லை எடுத்து உதடுகளில் தடவலாம். கற்றாழை ஜெல்லை குளிர்சாதன பெட்டியில் வைத்து கூட உதட்டில் தடவலாம்.

 

* சூரிய வெப்பத்தில் இருந்து உதட்டை பாதுக்காக பாதாம் எண்ணெயை உதட்டில் தடவலாம். இதன் மூலமாக உதடுகளில் உள்ள வெடிப்புகள் நீங்கும்.

 

* சூரிய வெப்பத்தில் இருந்து உதடுகளை பாதுகாக்க நாம் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவ வேண்டும். இதன் மூலமும் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் கூணமாகும். புண் ஏற்படாமல் இருக்கும்.

 

Previous articleஎன்னது… பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு பெரிய ஆபத்தா? அலார்ட் !!
Next articleபுதன் வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசிக்கார்களுக்கு தேடி வரப்போகும் பேரதிர்ஷ்டம்!