வயிற்று வலி, சளித் தொல்லையை போக்கும் ஆடாதொடை!!! இதன் மற்ற பயன்கள் என்னென்ன!!!
நமக்கு ஏற்படும் பல வகையான உடல் பாதிப்புகளையும் போக்கும் மூலிகைகளுள் அதிக சக்தி வாய்ந்த சத்துக்கள் நிறைந்த மூலிகை ஆடாதொடை இலைகள் ஆகும். இந்த ஆடாதொடை இலைகள் முடக்குவாதம் முதல் சளி வரை ஏற்படுகின்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் படைத்தது.
ஆடாதொடை இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்டுகின்றது. பலவித நோய்களை குணப்படுத்தும் இந்த மூலிகையான ஆடாதொடை இலைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆடாதொடை இலையின் மருத்துவ குணங்கள்…
* இந்த ஆடாதொடை இலையை பயன்படுத்தி கஷாயம் தயார் செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கஷாயத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைகின்றது.
* இந்த ஆடாதொடை இலைகளை நமக்கு ஏற்படும் உடல் வலியை குறைக்கவும் மருந்தாக பயன்படுத்தலாம்.
* ஆடாதொடை இலையை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கு ஏற்படும் கல்லீரல், நுரையீரல், போன்ற ஈரல்களின் வலி குறையும்.
* ஆடாதொடை இலையை ஊமத்தம்பூ இலையுடன் சுருட்டி புகை பிடித்தால் மூச்சுத் திணறல் பிரச்சனை குணமடையும்.
* இந்த ஆடாதொடை இலையை நாம் மருந்தாக பயன்படுத்தும் பொழுது நுரையீரலில் ஏற்படும் புண்கள் குணமடைகின்றது.
* சளித் தொல்லைக்கு சிறந்த நிவாரணியாக ஆடாதொடை இலை பயன்படுகின்றது. ஆடாதொடை இலையை பயன்படுத்தி ஆவி பிடித்தால் சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
* இந்த ஆடாதொடை இலையை நாம் மருந்தாக பயன்படுத்தும் பொழுது வயிற்று வலி குணமாகும்.
* ஒரு சிலருக்கு விக்கல் என்பது கூட.ஒரு நோயாக இருக்கும். அதாவது அடிக்கடி விக்கல் ஏற்படும். அப்படிப்பட்ட நபர்கள் ஆடாதொடை இலையை மருந்தாக பயன்படுத்தும் பொழுது விக்கல் பிரச்சனை குணமடைகின்றது.
* ஒரு சிலருக்கு உடல்நிலை சரி இல்லாத பொழுது வாந்தி நிற்காமல் வந்து கொண்டு இருக்கும். அவ்வாறு உள்ள நபர்கள் வாந்தியை நிறுத்த ஆடாதொடை இலையை பயன்படுத்தலாம்.