காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!!

0
31

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!!

காலை எழுந்தவுடன் தேநீர்,காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து விட்டு நட்ஸ்,முளைகட்டிய பயறு,பழச்சாறு போன்றவற்றை எடுத்து வந்தோம் என்றால் உடல் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.இவ்வாறு காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டிய 5 உணவு பொருட்கள் பற்றிய விவரம் இதோ.

1.தேன் கலந்த வெது வெதுப்பான நீர்:

காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீருடன் 1 தேக்கரண்டி சுத்தமான தேன் கலந்து பருகுவது சளி மற்றும் இருமலுக்கு நல்ல தீர்வாகும்.உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு வயிற்று எரிச்சல்,செரிமானக் கோளாறு,மலச்சிக்கல்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் விரைவில் குணமாகும்.தேன் கலந்த வெது வெதுப்பான நீர் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

2.வெந்தயம் அல்லது சீரகத் தண்ணீர்:

முந்தின நாள் இரவு வெந்தயம் அல்லது சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.அடுத்த நாள் காலை எழுந்தவுடன் இந்த பானத்தை குடிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி ஏற்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.சீரகத் தண்ணீர் செரிமான பிரச்சனைகளை நீக்கும் தன்மை கொண்டது.

3.பழைய சோறு மற்றும் பழச்சாறு:

வெறும் வயிற்றில் பழைய சோறு,பழங்கள் மற்றும் ஜூஸ்களை பருகி வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இவை சரும பிரச்சனை நீக்கி பொலிவுடன் வைக்க உதவுகிறது.பழைய சோற்றை பருகினால் அல்சர்,செரிமானம்,குடல் புண் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

4.பப்பாளி:

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடலாமா? என்ற கேள்வி பலருக்கும் உண்டு.பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது தான் அதன் பலன்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.இந்த பப்பாளி பழம் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்குவதோடு உடல் எடையை குறைக்க உதவுகிறது.

5.முளைகட்டிய பயறு:

முளைகட்டிய பயறு வகைகளில் அதிகளவு வைட்டமின்கள்,தாது உப்புக்கள்,புரோட்டின், என்சைம்ஸ்,ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது.இதனை உணவாக எடுத்து வந்தோம் என்றால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.