தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!!

0
213

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!!

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் தமுமுக 29ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு ஐம்பெரும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்கள் பங்கேற்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொண்டி பேரூர் சார்பில் தமுமுக 29ம் ஆண்டு துவக்க விழா நிகழ்வு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாஷா தலைமையில் நடைபெற்றது.

மமக மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் ஆகியோர் பங்கேற்று விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர்கள். முன்னதாக அன்பாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், நலத்திட்ட உதவிகள், மருத்துவ உதவிகள், கல்வி உதவி, பொதுநல தொண்டுக்கான உன்னத ஊழியர் விருது என ஐம்பெரும் விழா நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாஷா தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி வரவேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், தமுமுக மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம், துணைத்தலைவர் இப்ராஹிம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் உபயதுல்லா சகுபர், இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜசேகர், திருவாடானை திமுக ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் திமுக இஸ்மத் நானா, காங்கிரஸ் நகர தலைவர் காத்தார் ராஜா, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயுப்கான், தமுமுக பேரூர் செயலாளர் மைதீன், ஹம்மாது பரக்கத் அலி, பெரியசாமி, சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் பொதுநல தொண்டு செய்தவர்களுக்கு உன்னத ஊழியர் விருதுகளை நல்லாசிரியர் விருது பெற்ற ச.சாந்தி முருகானந்தம், அன்பாலயா உண்டு உறைவிட பள்ளி சவேரியார், வள்ளலார் சத்திய தர்மசாலை திருமலை ஆகியோருக்கு ஒன்றிய பெருந்தலைவர் முஹம்மது முக்தார், சட்டமன்ற உறுப்பினர் ராம.கருமாணிக்கம், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்குப் ஆகியோர் பொதுநல தொண்டுக்கான உன்னத ஊழியர் விருது பெற்றனர்.

தமுமுக கொடியை மாநில துணை பொதுச்செயலர் யாக்கூப் ஏற்றினார். அன்பாலாயா உண்டு உறைவிடப்பள்ளியில் இனிப்பு வழங்கிவிட்டு 29ம் ஆண்டு தொடக்க நிகழ்வு நடைபெற்றது. தேசிய நல்லாசிரியர் பா.உதயகுமார், ஐக்கிய ஜமாத் கௌரவத்தலைவர் பொறியாளர் அபூபக்கர், இந்து தர்ம பரிபாலன சபை முன்னாள் தலைவர் சி.பாலசுப்ரமணியம், தொண்டி பங்குத்தந்தை வியா குல அமிர்தராஜ், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.ஆனந்தன், ஒன்றிய பெருந்தலைவர் பி.முகமது முத்தார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் , தலைமைப் பிரதிநிதி மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 28 ஆண்டுகள் செய்த சாதனைகள் மக்கள் நல பணிகள் பற்றி உரை நிகழ்த்தினர் இறுதியாக திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் இராம, கருமாணிக்கம் ஏற்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட எளிய மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. மருத்துவ உதவி, கல்வி உதவி வழங்கப்பட்டது. இறுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டி பேரூர் தலைவர் சையது அப்துல் காதர் நன்றி கூறினார்.

Previous articleஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி விபத்து!!! பரிதாபமாக 10 பேர் பலியானதாக தகவல்!!!
Next articleபேங்க் லாக்கர் செம்ம ஸ்ட்ராங்!!! வங்கிக்கு பாராட்டு கடிதம் எழுதிய கொள்ளையன்!!!