சுவையான சிக்கன் மஞ்சூரியன் : செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
பூண்டு – 10 பல்
பெரிய வெங்காயம் – 1
குடைமிளகாய் – 2
கிராம்பு – 2
எலுமிச்சைச்சாறு – 2 ஸ்பூன்
சோள மாவு – 1 ஸ்பூன்
மிளகாய் சாஸ் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
தக்காளி சாஸ் – 1
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சிக்கன் பொரிப்பதற்கு
சிக்கன் – எலும்பில்லாதது அரை கிலோ
சோளமாவு – 200 கி.
மைதா – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
மிளகாய் சாஸ் – 4 ஸ்பூன்
முட்டை – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 முட்டை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். அதில், இஞ்சி, மிளகாய் சாஸ், உப்பு, சோளமாவு, மைதா மாவு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
இதன் பிறகு, வெட்டி வைத்த சிக்கனை அந்த முட்டை கலவையில் பிசைந்து அப்படியே 1 மணி நேரம் ஊற விடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிக்கனை அதில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுங்கள்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய பூண்டு, பூண்டு, குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்க்க வேண்டும்.
பின்னர், அதில் பொறித்த சிக்கனை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறி விட வேண்டும்.
இதன் பிறகு, சோளமாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கிரேவியில் சேர்க்க வேண்டும். பின்னர், தேவையான உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு இறக்கினால் விட சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி.