குடலை ஆரோக்கியமாக வைக்க இந்த 5 வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!

0
32
#image_title

குடலை ஆரோக்கியமாக வைக்க இந்த 5 வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!

நம் குடல் ஆரோக்கியமாக இருந்தலே உடலில் பல பாதிப்புகளை தவிர்த்து விட முடியும்.ஒருவேளை குடல் ஆரோக்கியத்தை இழந்தால் செரிமான கோளாறு,வயிறு உப்பசம், வாயு,மலச்சிக்கல்,குடற்புண் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும்.இந்நிலையில் நம் குடலை ஆரோக்கியமாக வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

குடலை ஆரோக்கியமாக வைக்க 5 வழிகள்:

1.அதிகளவு நார்ச்சத்துகள் நிறைந்துள்ள ஆப்பிள் பழத்தை தினமும் உண்டு வருவதன் மூலம் குடலும்,கல்லீரலும் சுத்தமாகும்.

2.நம் உடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்ற அதிகளவு தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் சூடான நீரில் கொஞ்சம் தேன்,லெமன் சேர்த்து குடிப்பதினால் நம் குடல் பகுதி எளிதில் சுத்தமாகும்.

3.இஞ்சி சாறு வயிறு வீக்கத்தை சரி செய்து குடல் செயல்பாட்டை துரிதப்படுத்த உதவுகிறது.
இஞ்சி சிறு துண்டு எடுத்து தோல் நீக்கி அவற்றில் சாறு எடுத்து தேன் கலந்து குடித்து வந்தால் குடல் சுத்தமாகி விடும்.கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் இந்த இஞ்சி சாற்றை பருக வேண்டாம்.

4.ஆவாரம் பூவில் இருக்கின்ற ஆன்ட்ராயுகின்கள் என்ற பொருள் குடல் தூண்டுதலை ஏற்படுத்தி மலச்சிக்கல் பாதிப்பை நீக்குகிறது.இதனால் குடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு ஆரோக்கியமாக இருக்கும்.இந்த ஆவாரம் பூவை கொதிக்கின்ற நீரில் போட்டு 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி பருக வேண்டும்.

5.ஆளி விதைகளை பொடி செய்து அவற்றை 1 தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து வந்தோம் என்றால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆளி விதையில் அதிகளவில் ஓமேகா கொழுப்பு அமிலங்கள்,நார்ச்சத்துகள்,ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதினால் இவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.