State

மாஸ்க் கூட அணிய தெரியாத ஸ்டாலினால் மாற்றத்தை எப்படி உருவாக்க முடியும்! இணையத்தில் எழும் விமர்சனங்கள்.!!

மாஸ்க் கூட அணிய தெரியாத ஸ்டாலினால் மாற்றத்தை எப்படி உருவாக்க முடியும்! இணையத்தில் எழும் விமர்சனங்கள்.!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை ஆன்லைன் மூலம் நடத்தினார்
அப்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் முகத்தில் N95 மாஸ்க்கை தவறாக ஸ்டாலின் அணிந்திருந்தார். இது தற்போது இணையத்தில் விமர்சனமாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடப்பாடி அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி மே 3 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தனது உரையில் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், ஆன்லைன் மூலம் அனைத்துகட்சி கூட்டத்தை நடத்திய ஸ்டாலின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த கூட்டத்தின் போது தான் அணிந்திருந்த முககவசத்தை தவறாக அணிந்திருந்தார். எப்போதுமே பயன்படுத்தாத பொதுமக்கள் பலரும் சரியான பயன்படுத்தி வரும் சூழலில் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக இருக்க வேண்டிய ஸ்டாலின் தவறாக மாஸ்க் அணிந்திருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பொது விழிப்புணர்வு சம்பந்தமான செயல்களில் முதலில் நாம் இருக்கிறோமா என்று சுய பரிசோதனை செய்வதே சரியான தொடக்கம் என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஒரு கோடி வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசியதற்கும் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment