தொடரும் ரயில் விபத்துகள்!! அடுத்து இந்த ரயிலில் நேர்ந்த விபரீதம்!
ஹைதராபாத்தில் இருந்து ஹவுரா சென்ற விரைவு ரயிலில் திடீரென புகை வந்துள்ளது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
சமீப காலமாக ரயில் விபத்துக்கள் தொடர்வது அதிகரித்து வருகிறது. இதற்கு முதல் உதாரணமாக ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கோரமண்டல் சரக்கு ரயில் விபத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த விபத்தில் மொத்தம் 295 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் இது நேருக்கு நேர் ரயில்கள் மோதி ஏற்படும் விபத்துக்கு பதிலாக 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி வித்தியாசமாக விபத்தாக மாறியது.
இந்த விபத்தில் இரண்டு விரைவு பயணிகள் ரயிலும், ஒரு சரக்கு ரயிலும் மோதியுள்ளன. நாட்டையே பெரும் அதிர்வு குள்ளாக்கிய இந்த விபத்து இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்தது.
3 ஏப்ரல் 2023 அன்று கோழிக்கோடு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தீ வைத்து எரித்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இப்படி தொடர்ந்து ரயில்வே விபத்துக்கள் ஏற்படும் நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இருந்து ஹௌரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென புகை வந்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருவி அந்த ரயிலானது வாரங்கல் அடுத்துள்ள நெல் கொண்டா ரயில் நிலையத்தில் பத்திரமாக நிறுத்தப்பட்டது. ரயில் நின்றதும் பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்து ரயிலை விட்டு கீழே இறங்கி விட்டனர்.
இந்த தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பழுதான ரயில் சக்கரத்தின் பகுதியில் சீரமைப்பு பணியை மேற்கொண்டு சரி செய்ததும் ரயிலானது மீண்டும் இயக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் முதல் கட்ட விசாரணையில் ரயில் சக்கர பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.