திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு : அடுத்தடுத்து திட்டங்கள் என்ன?

0
37
#image_title

திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு : அடுத்தடுத்து திட்டங்கள் என்ன?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை திமுக அரசு நிறுத்தி, மீனவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டி, அஇஅதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 13ம் தேதி புதன்கிழமை அன்று காலை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-20ம் கால ஆண்டில் அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தகளை அதிகாரிகள் பிறப்பித்தனர். ஆனால் தற்போது உள்ள திமுக அரசு இத்திட்ட முழுவதையும் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு அஇஅதிமுக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் தனது கடும் கண்டனத்தை பிறப்பித்துள்ளது. மேலும் இது மீனவர்களின் நலனுக்கு எதிரான செயல் என்றும் தனது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

இதுபோன்று தொடர்ந்து திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் அதிமுக ஆட்சி தொடங்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து முடி வருவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்தி, மீனவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்ட திமுக அரசை கண்டித்து அஇஅதிமுகவினர் மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெறும் போராட்டத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. சி.வி.சண்முகம் அவர்கள் தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளார்.

அதிமுக தலைமையகத்தில் நேற்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திமுக அரசுக்கு எதிராக அதிமுக பல்வேறு போராட்டங்கள்; ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

 

author avatar
Parthipan K