பெண்களே பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்கின்றதா!!? இதோ உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்!!!
பெண்களின் பிரசவத்திற்கு பிறகு அதாவது குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கு அதிகரிக்கும் உடல் எடையை குறைப்பதற்கு சில எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
பெண்களில் அதிகம் பேருக்கு பிரசவத்திற்கு பிறகு அதாவது குழந்தை பெற்ற பிறகு அவர்களின் உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகின்றது. பெண்கள் கர்ப்பம் தரித்ததில் இருந்து அவர்களின் பிரசவகாலம் வரை ஒவ்வொரு பெண்ணுக்கும் 10 கிலோ முதல் 12 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பதற்கு அவர்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றம் தான் காரணம் ஆகும். பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு அதிகரிக்கும் உடல் எடையை குறைப்பதற்கு சில வழிமுறைகள் பற்றி இனி பார்க்கலாம்.
பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு அதிகரிக்கும் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்…
* பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் உடல் எடையை குறைக்க மஞ்சள் பொடியை கலந்த பாலை குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும். உடல் எடை குறைந்து விடும்.
* வெறும் வயிற்றில் வெந்தயத் தண்ணீர் குடித்து வரும் பொழுது பிரசவ காலத்தில் அதிகரிக்கும் உடல் எடையை கட்டுப்படுத்தலாம். மேலும் பிரசவத்திற்கு பிறகு அதிகரிக்கும் உடல் எடையை குறைக்கலாம்.
* பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் உடல் எடையை குறைப்பதற்கு பெஞ்சீரகத் தண்ணீரை குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள், தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து வெளியேறி உடல் எடை குறையத் தொடங்கும்.
* ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் எலுமிச்சம் பழச் சாறை கழந்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து பிரசவத்திற்கு பிறகு அதிகரிக்கும் உடல் எடை குறைந்து விடும்.