தித்திக்கும் கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் : கொஞ்சம் வித்தியாசமா செய்து பார்க்கலாமா? வாங்க..

0
40
#image_title

தித்திக்கும் கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் : கொஞ்சம் வித்தியாசமா செய்து பார்க்கலாமா? வாங்க…

தித்திக்கும் கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன்

தேவையான பொருட்கள்

அரிசி  – 100 கிராம்
வெல்லம் – 200 கிராம்
முந்திரி – தேவைக்கேற்ப
தேங்காய் பால் – 400 கிராம்
தேங்காய் துண்டுகள் – தேவைக்கேற்ப

ஏலக்காய் தூள் – தேவைக்கேற்ப
நெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் அரிசை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்தில் அரிசியை போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
ஊறிய அரிசைய தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாழை இலையை வெட்டி அதில் அடியை தட்டி, வாழை இலையை நூலிலால் கட்டி இட்லி பாத்திரத்தில் போட்டு நன்றாக வேக விட வேண்டும்.
வெந்த இட்லியை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி நெய் தடவிய தடடியில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து, அதில் முந்திரி, தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, அதில் வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.
இதனையடுத்து, கரைத்து வைத்துள்ள வெல்லத்தை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளற வேண்டும்.
வெல்லம் கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
கெட்டியான பதத்திற்கு வந்தபிறகு, அதில் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.
பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் ரெடி.