கொரோனா விருந்து: கும்பகோணத்தில் கும்பலாக கறி விருந்து! கொக்கிபோட்டு தூக்கிய போலீசார்..!!

0
166

கும்பகோணத்தில் கும்பலாக கறி விருந்து! கொக்கிபோட்டு தூக்கிய போலீசார்..!!

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நண்பர்களுடன் சமூக இடைவெளி இல்லாமல் கும்பலாக கொரோனா கறிவிருந்துக்கு ஏற்பாடு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக போடப்பட்ட இருந்த 21 நாட்கள் முடிவடைந்தது. மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மோடி அறிவித்தார். இதன் அடிப்படையில் இரண்டாவது ஊரடங்கு உத்தரவு சற்று கடினமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் தியாக சமுத்திரம் என்ற கிராமத்தில், சிவகுரு என்கிற இளைஞர் சுமார் 30 நண்பர்களுடன் சேர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் கறிவிருந்து வைத்துள்ளார். ஒரே இலையில் சிக்கன் உட்பட உணவுகளை கொட்டி அருகருகே உட்கார்ந்து சாப்பிட்டுள்ளனர். கறிவிருந்து நடத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி போலீசாரின் கண்ணில் பட்டது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் விருந்து ஏற்பாடு செய்த சிவகுரு என்ற இளைஞர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். விருந்தில் கலந்துகொண்ட மற்ற இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Previous articleஊரடங்கு நேரத்தில் உள்ளே புகுந்து தனிமை! லோடுமேன் வீட்டில் லோக்கல் போலீஸ் செய்த காரியம்! கதவை தட்டியபோது தகராறு.!
Next articleஅமெரிக்காவில் 6 லட்சம் கொரோனா பாதிப்பு! மூன்று கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்! – டொனால்ட் டிரம்ப்