விஜய் தேவரகொண்டா யாரை காதலிக்கிறார்? ஓ.. இவருடன் தான் திருமணமா.. சமந்தா சொன்ன பதில்!

Photo of author

By Divya

விஜய் தேவரகொண்டா யாரை காதலிக்கிறார்? ஓ.. இவருடன் தான் திருமணமா.. சமந்தா சொன்ன பதில்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.சமீபத்தில் இவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான “குஷி” என்ற படம் கதை ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.இப்படத்தில் விஜய் தேவரகொண்டா,சமந்தா இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்த நிலையில் பட ப்ரோமோஷனுக்காக இவர்கள் இருவரும் பல்வேறு நிகச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.இதனால் சமந்தாவும்,விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக வதந்தி பரப்பப்பட்டது.

இந்நிலையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் விஜய் தேவரகொண்டா லிவிங் டுகெதர்-ல் உள்ளார்கள் என்று தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.இவர்கள் இருவரும் ‘கீதா கோவிந்தம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து மிகவும் பிரபலமான ரீல் ஜோடியாக கொண்டாடப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சுல்தான்,புஷ்பா,வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார் ராஷ்மிகா.விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா அவர்கள் விஜய் தேவரகொண்டா ஒரு பெண்ணை காதலிக்கிறார்.மூன்று மாதங்களில் அவர்களுக்கு திருமணம் நடக்க போகிறது என்று தெரிவித்திருந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகா மந்தனாவை தான் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பது உறுதியாகி இருக்கின்றது.