சும்மா கெத்தா ஸ்டைலா ஓபனிங் கொடுத்த ரஜினி படங்களின் விவரம்!!

0
152
#image_title

சும்மா கெத்தா ஸ்டைலா ஓபனிங் கொடுத்த ரஜினி படங்களின் விவரம்!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த்.தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொடுள்ள ரஜினி நடப்பது,கண்ணாடி போடுவது,சிகிரெட் பிடிப்பது என்று தனக்கென தனி ஸ்டைலை பாலோ செய்து வருகிறார்.ரஜினி இதுவரை நடித்த படங்களின் ஓபனிங் மாஸ் சீன்கள் குறித்த தொகுப்பு இதோ.

1.மிஸ்டர் பாரத்

1986ல் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும். இப்படத்தில் ரஜினிகாந்த்,சத்யராஜ், அம்பிகா,கவுண்டமணி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.தனது தாயை ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழும் தனது தந்தையை பழிவாங்கும் ஒரு மகனின் கதை தான் மிஸ்டர் பாரத் படம்.இப்படத்தில் ஒரு மலை பகுதியில் வெடி வைத்து பாறைகளை உடைக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும்.பாறைகளுக்கு வெடி வைக்கும்பொழுது அருகில் ஒரு கை குழந்தை இருக்கும்.அந்த வெடி வெடிப்பதற்கு முன்னால் அந்த குழந்தையை ரஜினி காப்பாற்றி தாயிடம் குழந்தையை கொடுப்பது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

2.மனிதன்

1987ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும். இப்படத்தில் ரஜினிகாந்த்,ரூபினி,ரகுவரன்,ஸ்ரீவித்யா,டெல்லி கணேஷ்,செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் ராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி,ஜெயிலில் இருந்து வெளியே வருவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

3.தர்மத்தின் தலைவன்

1988ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.ரஜினிகாந்த், பிரபு,குஷ்பூ,சுகாசினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம்.
இப்படத்தில் பேராசிரியர் பாலசுப்ரமணியன் (பாலு) மற்றும் ஷங்கர் என்ற இரு வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.இப்படத்தில் கல்லூரி மாணவராக நடித்த நாசர் சிறிய காந்தி சிலையை தூக்கி எறிகிறார்.அதனை பேராசிரியர் பாலசுப்ரமணியன் கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி கீழே விடாமல் பிடிப்பது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

4.கோடி பறக்குது

1988ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில்
ரஜினிகாந்த்,அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.ஹம்சலேகா இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ஈரோடு சிவகிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி ‘என் கொடி பறக்க வேண்டிய இடத்தில வேற எவன் கொடிடா பறக்குது’ என்று சொல்வது போன்ற வசனத்துடன் ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

5.ராஜாதி ராஜா

1989ல் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான மசாலத் திரைப்படமாகும்.இப்படத்தில்
ரஜினிகாந்த்,ராதா,நதியா,ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் ராஜா மற்றும் சின்னராசு இரட்டை வேடங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் ராஜா தனது தந்தையின் மரணம் பற்றி அறிந்து அதிர்ச்சி ஆகிறார்.இறுதியில் தந்தையை கொன்றது யார் என்ற உண்மையைக் கண்டறிந்தாரா , சதிகாரர்கள் சிறை சென்றார்களா என்பது தான் இப்படத்தின் கதை.இப்படத்தில் ராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி காரில் பயணிக்கும் போது ‘அமெரிக்காவில் இதனை வருடங்கள் இருந்துட்டீங்க,நம்ம தமிழ ஒன்னும் மறக்கலையே’ என்று அருகில் இருப்பவர் கேட்கிறார்.அதற்கு ‘என் மூச்சு இருக்க வர முத்தமிழை மறக்க மாட்டேன்’ என்று கூறும் வசனத்துடன் ரஜினியின் ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

6.சிவா

1989ல் அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினிகாந்த்,சோபனா, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி,சிறுவன் ஒருவனை நபர் ஒருவர் தூக்கி வீசுகிறார்.அந்த சமயத்தில் ரஜினி அச்சிறுவனை காப்பாற்றி அவனுக்கு நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

7.மாப்பிளை

1989ல் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினிகாந்த்,அமலா, ஜெய்சங்கர்,ஸ்ரீ வித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி,பைக்கில் வரும் கல்யாண மணடபத்தில் ஸ்டைலாக சிகிரெட் பிடித்து கொண்டு மணப் பெண்ணை கூட்டி செல்வது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

8.பணக்காரன்

1990ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினிகாந்த்,கௌதமி, விஜயகுமார்,ராதா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி ஒரு ஹோட்டலில் வேலை செய்பவராக ‘நூறு வருஷம்’ என்று தொடங்கும் பாடலுக்கு ஆடுவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

9.அதிசய பிறவி

1990ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினிகாந்த்,கனகா,ஷீபா ஆகாஷ்தீப்,நாகேஷ்,ஜெய் கணேஷ்,சின்னி ஜெயந்த்,சோ ராமசாமி , மற்றும் வினு சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் காளையன் மற்றும் பாலு என்ற இரட்டை வேடங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.இப்படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஷீபா ஆகாஷ்தீப் ‘நான் நெனைக்குற ஆம்புள சூப்பர் மேன்னா இருக்கனும்’ என்று சொல்லும் போது ரஜினியின் உருவம் காட்டப்படுவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

10.தர்மதுரை

1991ல் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினிகாந்த்,கௌதமி,நிழல்கள் ரவி,சரண் ராஜ்,மது ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் தர்மதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி,ஒரு இளம் காதல் ஜோடியை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுவது போன்று ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

11.தளபதி

1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாடக திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினிகாந்த்,மம்மூட்டி,அரவிந்த் சாமி,ஜெய்சங்கர்,சோபனா,பானுப்பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.தாய்,மகன் பாசப்பிணைப்பில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி,மழையில் ரவுடிகளுடன் சண்டை போடுவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

12.மன்னன்

1992ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினிகாந்த்,குஷ்பூ,விஜயசாந்தி,விசு,மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் திமிர் பிடித்த பணக்கார பெண்ணாக நடித்த விஜயசாந்தி ‘எனக்குன்னு ஒருத்தன் இந்த உலகத்துல எதாவது ஒரு மூலையில பிறந்திருந்தால் கண்டிப்பா வருவான்’ என்று சொல்லும் போது ரஜினி தோன்றுவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

13.அண்ணாமலை

1992ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினிகாந்த்,குஷ்பூ,மனோரமா,ஜனகராஜ்,சரத் பாபு,ரேகா,ராதா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் ரஜினி,அண்ணாமலை என்ற பெயரில் பால் வியாபாரியாக இருந்து பின்னாளில் பணக்காரனாக உருவெடுப்பது போன்ற கதை அமைந்திருக்கும்.இதில் நெற்றியில் பட்டை போட்டு கையில் மேளம் வைத்து ‘வந்தேன்டா பாலு காரன்’ என்ற பாட்டிற்கு ஆடுவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

14.பாண்டியன்

1992ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.ரஜினிகாந்த்,குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் ரஜினி.’உலகத்தில் என்ன எதிர்க்க எவன் டா இருக்கான்’ என்று ஒருவர் சொல்லும் போது ரஜினி ஒரு பேருந்தில் இருந்து இறங்குவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

15.எஜமான்

1993ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினிகாந்த்,மீனா,ஐஸ்வர்யா,கவுண்டமணி,செந்தில்,நெப்போலியன்,மனோரமா,நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் வானவராயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் ரஜினி.இதில் ஒருவர் ‘யார் யா உங்க எஜமான்’ என்று கேட்கிறார்.அதற்கு கூட்டத்தில் இருந்த ஒருவர் ‘இன்னைக்கு ஜனங்க எல்லாம் யார் பின்னாடி இருக்காங்களோ அவர் தாங்க எங்க எஜமான்’ என்று சொல்லும் போது ரஜினி வருவது போன்றும் வானவராயன் என்று சொல்வது போன்றும் ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

16.உழைப்பாளி

1993ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினிகாந்த்,ராதா ரவி,ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் தமிழரசன்,தமிழழகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி கோட் ஷூட் அணிந்து கொண்டு கண் அடிப்பது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

17.வீரா

1994ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,மீனா,ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் முத்து வீரப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி சிரித்தபடி சல்யூட் வைப்பது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

18.பாட்ஷா

1995ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,நக்மா,ரகுவரன்,சரண்ராஜ்,ஜனகராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் ரஜினி அவர்கள் பாட்ஷா,மாணிக்கம் என்ற இரு பெயர்களில் நடித்தார்.இதில் ஜனகராஜ் ‘இன்னைக்கு ஆய்த பூஜை இல்ல அண்ணன் ஆட்டோ ஸ்டாண்ட்ல பட்டைய கிளப்பிகிட்டு இருப்பாரு’ என்று சொல்லும போது ஒரு பூசணிக்காய் தூக்கி போட்டு தன் தலையால் உடைத்து வணக்கம் வைப்பது போன்று ரஜினியின் ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

19.முத்து

1995ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,மீனா,சரத்பாபு,வடிவேலு,காந்திமதி,செந்தில்,ராதாரவி,ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் ரஜினி அவர்கள் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இதில் கடவுளை பார்த்து வாங்கியபடி ‘ஆண்டவா எல்லோரும் எப்பவும் மன நிம்மதியோட எந்த தொந்தரவும் இல்லாமல் சந்தோசமா இருக்கணும் பா’ என்று கூறி விசில் அடித்து தன் குதிரை வாகனத்தை அழைப்பது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

20.அருணாச்சலம்

1997ல் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி, ரம்பா, சௌந்தர்யா,மனோரமா,விசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் ரஜினி அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் ஒரு கோவிலுக்கு கடவுளை வணங்கியபடி சிரித்த முகத்தோடு இருப்பது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

21.படையப்பா

1999ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,சௌந்தர்யா,சிவாஜி,ரம்யா கிருஷ்ணன்,நாசர்,மணிவண்ணன்,அப்பாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் ரஜினி படையப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இதில் ஒரு நபர் பாம்பு புற்றை இடிக்க முற்படுகிறார்.அப்பொழுது அவரை தடுத்து புற்றில்இருந்த பாம்பை எடுத்து சல்யூட் அடித்தபடி அந்த பாம்பை வெளியில் விடுவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

22.பாபா

2002ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,மனிஷா கொய்ராலா,கவுண்டமணி,விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் பாபா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி,பாபா என்று உணர்த்துவது போன்ற கை பாவனையில் சிரித்த முகத்தோடு ‘டிப்பு டிப்பு’ என்ற பாடலுக்கு ஆடுவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

23.சந்திரமுகி

2002ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,நயன்தாரா,ஜோதிகா,வடிவேல்,நாசர்,பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் சரவணன்,வேட்டையன் ராஜா என்ற இரு வேடங்களில் ரஜினி நடித்திருந்தனர்.இப்படத்தில் பிரபுவை சில ரவுடிகள் தாக்க முற்படுகின்றனர்.அப்பொழுது அவரை காப்பாற்ற ஒரு நபரை தன் காலால் எட்டி உதைப்பது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

24.சிவாஜி

2007ல் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,விவேக்,மணிவண்ணன்,ஸ்ரேயா,சுமன்,ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் சிவாஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி ஜெயில் சிறையில் இருப்பது போன்றும் அப்பொழுது பக்கத்துக்கு சிறையில் இருக்கும் நபர் ஒருவர் ‘என்ன பா மர்டர் கேஸா? எதற்காக சிறை வந்த,என்ன தப்பு செய்த என்று கேட்கும் பொழுது நாட்டுக்கு நல்லது செய்தேன் அதனால் உள்ளே இருக்கிறேன்’ என்று ரஜினி கூறுவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

25.குசேலன்

2008ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,நயன்தாரா,மீனா,வடிவேலு,பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் அசோக் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி ஒருசினிமா ஸ்டாராக நடித்திருப்பார்.இதில் ஒரு வெள்ளை குதிரையில் அவர் வருவது போன்றும் சூப்பர் ஸ்டார் என்று கத்தியில் எழுவது போன்றும் ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

26.எந்திரன்

2010ல் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,ஐஸ்வர்யா ராய்,சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் விஞ்ஞானி வசீகரன் மற்றும் ரோபோ சிட்டி என்ற இரு வேடங்களில் நடித்திருந்தார்.இதில் டாக்டர் உங்களுக்கு கொரியர் வந்திருக்கு.மிஸ் யூ என்று அதில்எழுதிருக்கு என ரோபோ ஒன்று சொல்லும் போது அவர் உருவம் தெரிவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

27.கோச்சடையான்

2014ல் சௌந்தர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,தீபிகா படுகோன்,சரத்குமார்,ஆதி,ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் கோச்சடையான்,ராணா,சேனா உள்ளிட்ட வேடங்களில் நடித்திருந்தார் ரஜினி.இதில் ஒருவர் ‘வர சொல்லுங்கள் ராணாவை’ என்று சொல்லும் பொழுது தனது குதிரை வாகனத்தில் ரஜினி தோன்றுவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

28.லிங்கா

2014ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,அனுஷ்கா ஷெட்டி,ஜெகபதி பாபு,தேவ் கில்,சந்தானம்,சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.கோட்டையூர் ராஜா லிங்கேஸ்வரனாகவும் அவர் பேரன் கே.லிங்கேஸ்வரனாகவும் ரஜினி நடித்திருப்பார்.இதில் ஒரு காரில் இருந்து ஸ்டைலாக இறங்குவது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

29.கபாலி

2016ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,ராதிகா அப்டே,கிஷோர் குமார்,தன்ஷிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.கபாலீஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி கோட் ஷூட் அணிந்து ஜெயிலில் இருந்து வெளியே வந்து மாஸ் என்ட்ரி கொடுப்பது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

30.காலா

2018ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,நானா படேகர்,ஹீமா குரேஷி,சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறார்.அப்பொழுது ஒரு சிறுவனை பார்த்து ‘2 ரன்கள் எடுப்பது எனக்கு ஜூஜூபி,இப்ப பாருங்கடா என் ஆட்டத்தை’ என்று சொல்வது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

31.2.0

2018ல் சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,அக்ஷய் குமார்,ஏமி ஜேக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் விஞ்ஞானி வசீகரன் மற்றும் ரோபோ சிட்டி என்ற இரு வேடங்களில் ரஜினி நடித்திருந்தார்.இதில் கல்லூரி மாணவர்களிடம் ரஜினி ‘இது தான் நான் உருவாக்கின புது ரோபோட்,பெயர் நிலா’ என்று சொல்வது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

32.பேட்ட

2019ல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,விஜய் சேதுபதி,த்ரிஷா,சிம்ரன்,சசிகுமார்,பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் காளி,பேட்ட வேலன் என்ற இரு வேடங்களில் ரஜினி நடித்திருந்தார்.இதில் ரஜினிக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வில்லன்களுடன் சண்டை போடுவது போடும் ரஜினி ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று சொல்வது போன்ற ஓபனிங் காட்சி இடம் பெற்றிருக்கும்.

33.தர்பார்

2020ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,நயன்தாரா,நிவேதா தாமஸ்,யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் ஐ.பி.எஸ் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார்.இதில் வில்லங்களை அடித்து நொறுக்கவது ஓபனிங் காட்சியாக இடம் பெற்றிருக்கும்.

34.அண்ணாத்த

2021ல் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.இப்படத்தில் ரஜினி,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,மீனா,குஷ்பூ,வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தில் காளையன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார்.இதில் வில்லங்களை அடிப்பது போன்றும்,என் பேரு காளையன் என்று அறிமுகப்படுத்துவது போன்ற ஓபனிங் காட்சியாக இடம் பெற்றிருக்கும்.

Previous articleசனாதனம் குறித்து இனி யாரும் பேசக்கூடாது ஸ்டாலின் போட்ட புது உத்தரவு!!
Next articleதிருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா! அப்போ சமந்தா வாழ்க்கை? ரசிகர்கள் கவலை!