இன்று முதல் மகளிர் உதவித் தொகை திட்டம் தொடக்கம்!!! யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைத்துள்ளது!!! கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்!!!
மகளிருக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் மகளரிர் உதவித் தொகை திட்டம் இன்று(செப்டம்பர்15) முதல் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
கடைசியாக நடைபெற்ற தேர்தலில் திமுக கட்சி ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று திமுக கட்சி அறிவித்தது. அதன்படி திமுக கட்சி ஆட்சி அமைத்த பிறகு மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கார்ட் வைத்துள்ள பெண்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. சுமார் 1 கோடியே 68 லட்சம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. பின்னர் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மகளிர் உதவித் தொகை பெறுவதற்கு 1.06 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. தகுதியான பெண்களின் வங்கி கணக்குகளுக்கு 1 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும் சில பெண்களின் வங்கி கணக்கிற்கு 1000 ரூபாய் முழுவதும் அனுப்பப்பட்டது.
மேலும் நிராகரிக்கப்பட்ட பெண்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் அனுப்பப்பட்டது. இன்று(செப்டம்பர்15) முதல் அதாவது தமிழக அரசு ஏற்கனவே கூறியது போல அறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று(செப்டம்பர்15) மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படவுள்ளது. நிரகாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையத்தின் மூலமாக விண்ணப்பம் அளித்து கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். இந்த மேல் முறையீட்டு மனுக்களை அரசு தரவு ஆவணங்களுடன் சரிபார்த்து தகுதியானவர்கள் இருந்தால் 1000 ரூபாய் உதவித் தொகையான மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.