பல நன்மைகளை அளிக்கும் உருளைக்கிழங்கு!!! இதில் பிரெட் சேர்த்து உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி!!?
நமது உடலுக்கு பல நன்மைகளை தரும் உருளைக்கிழங்குடன் பிரெட் சேர்த்து வடை எப்படி தயாரிப்பது என்பது பற்றியும் உருளைக் கிழங்கில் உள்ள நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிரெட் உருளைக்கிழங்கு வடை செய்ய தேவையான பொருட்கள் என்ன எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிரெட் உருளைக்கிழங்கு வடை செய்யத் தேவையான பொருள்கள்…
* உருளைக்கிழங்கு
* பிரெட் துண்டுகள்
* வறுத்த ரவை
* வெங்காயம்
* அரிசி மாவு
* உப்பு
* எண்ணெய்
* கேரட் துருவல்
* இஞ்சி துருவல்
* பச்சை மிளகாய்
* மிளகாய் பொடி
* கறிவேப்பிலை
* கொத்தமல்லி தழை
பிரெட் உருளைக்கிழங்கு வடை செய்முறை…
* உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகிய மூன்றையும் படியாக நறுக்கிக் கொள்ளை வேண்டும்.
* பெரிய அகன்ற பாத்திரத்தில் பிரட்டை உதிர்த்து போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் இதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், அரிசி மாவு, கேரட் துருவல், வேகவைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து மாவு போல நன்கு பிசைந்து கொள்ளை வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
* பின்னர் அடுப்பை பற்ற வைத்து காய் வைத்து எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* எண்ணெய் சூடான பிறகு தயார் செய்து வைத்துள்ள உருளைக் கிழங்கை வகையாக தட்டி எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். இதோ சுவையான பிரெட் உருளைக்கிழங்கு வடை தயார் ஆகி விட்டது.
உருளைக்கிழங்கு நமது சருமத்திற்கு நல்ல பயன்களை தருகின்றது. மற்ற அனைத்து காய்கறிகளையும் விட உருளைக்கிழங்கு குறைவான கலோரி சத்துக்கள் உள்ள காய் ஆகும். இந்த உருளைக்கிழங்கில் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று தெரிந்து கொள்வோம்.
உருளைக் கிழங்கின் மூலமாக கிடைக்கும் நன்மைகள்…
* உருளைக் கிழங்கில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கிடைக்கின்றது.
* உருளைக்கிழங்கில் பொட்டாசியம் சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. இதனால் இருதய நோயாளிகளும் இரத்த கொதிப்பு உள்ளவர்களும் உருளைக்கிழங்கை சாப்பிடலாம். பல நன்மைகளை தருகின்றது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது.
* உருளைக்கிழங்கில் மாவுச்சத்து உள்ளது. இந்த மாவுச்சத்து நமது அடிவயிறிலும் இரைப்பைகளிலும் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அதில் நச்சுநீர் தேங்குவதையும் முன்கூட்டியே தடுக்கின்றது.
* வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், இரைப்பை சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள், குடல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ள அனைவரும் உருளைக்கிழங்கில் இருந்து சாறு எடுத்து குடிக்கலாம். நன்மை தரும்.
* உருளைக்கிழங்கில் அதிகளவில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் இருக்கின்றது. எனவே ஒல்லியான உடல் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க உருளைக்கிழங்கை சாப்பிட்டு வரலாம்.
* பச்சையான உருளைக்கிழங்கை எடுத்து அரைத்து அதனுடன் தேன் கலந்து சருமத்தில் பூசி வந்தால் சருமம் பொலிவு பெறும்.