எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த 6 பழங்களை சாப்பிட்டாலே போதும்…
நாம் அனைவருக்கும் உடலை இளமையாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம். பழங்கள் மற்றும் ஊட்டச்சத்துக் கொண்ட உணவுகளை சாப்பிட்டால்தான் அகமும் சரி, புறமும் சரி பொலிவுடனும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அதிகளவில் நாம் பழங்கள் சாப்பிட்டால் சரும அழகை கொடுக்கும். ஒவ்வொரு பழங்களிலும் பலவிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
எனவே, நாம் எப்போதும் இளமையாக இருக்க சாப்பிட வேண்டிய 6 பழங்களை பற்றி பார்ப்போம் –
ஆப்பிள்
நாம் இளமையாக இருக்க தினமும் ஆப்பிளை சாப்பிட்டு வரலாம். ஏனென்றால், ஆப்பிளிலில் நார்ச்சத்து உள்ளது. மேலும், நம்முடைய தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
அவகோடா
தினமும் அவகேடோ அல்லது பட்டர் ஃபுரூட்டில் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பயோட்டின் நம் சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கும். அவகோடா சருமத்தின் பாதுகாவலனாக விளங்கும். இப்பழத்தில் உள்ள கொழுப்பு அமிலம் சருமத்துக்குத் தேவையான வழுவழுப்பு எண்ணெய்யை கொடுக்கும். இதனால், சருமம் பட்டுப்போல் மிளிரும்.
வாழைப்பழம்
தினமும் நாம் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பொட்டாசியம் நம்மை இயற்கையாகவே இளமையாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். மேலும், சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து, வறட்சியை போக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, இ அதிகமாக உள்ளதால், அது சருமத்துக்கு எலாஸ்டிசிட்டியை கொடுக்கும். வாழைப்பழத்தை சாப்பிட்டால், முகத்தில் உள்ள சுருக்கம், புள்ளிகள் மறைந்து முகம் புதுப்பொலிவு பெறும்.
கிவி
தினமும் நாம் கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி நம்மை மிகவும் அழகாக மாற்றும். மேலும், 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் இருப்பதைக் காட்டிலும் வைட்டமின் சி கிவி பழத்தில் அதிகமாக உள்ளது. இதனால், நம் சருமத்தை எப்போதும் இளமையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
பப்பாளி
தினமும் நாம் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், சருமம் மிகவும் அழகாக மாறும். அதில் உள்ள வைட்டமின் ஏ பீட்டா உடலில் உள்ள செரிமானப் பிரச்சினையை போக்கும். கண் பார்வை குறைபாட்டை தடுக்கும். அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை சரிசெய்யும்.
மாதுளை
தினமும் நாம் மாதுளை பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள், தாது உப்புக்கள் நம்மை ஃப்ரீராடிக்கல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும். எப்போதும் நம்மை இளமையாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். மேலும், புறஊதாக் கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கும்.