கோவை மாவட்டத்தில் மீண்டும் போட்டியிடப் போகிறேன்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி!!!
நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் கோவை மாவட்டத்தில் போட்டியிட தயாராக இருக்கின்றேன் என்று நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மக்கள் நீதி மையத்தின் மாநில செயற்குழு மற்றும் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று(செப்டம்பர்22) நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் மக்கள் நீதி மையத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் “கோவை தெற்கு தொகுதியில் இறுதியாக நடந்த தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் டில்லி பெற்று மூக்குடைபட்டேன். அதற்கு மருந்து தடவிக் கொண்டு மீண்டும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியில் தயாராக இருக்கின்றேன்.
இனி தேர்தல் களத்தை தயார்படுத்த வேண்டும். 40000 பேர் களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். முதலில் அதை தயார் செய்துவிட்டு சொல்லுங்கள். கூட்டணி வைத்துக் கொள்வதற்கு பலர் தயாராக இருக்கின்றனர். நாம் நேர்மையாக செயல்படும் பொழுது அவர்களே மீண்டும் வந்து நம்மை அழைப்பார்கள்.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளமானது கட்டாயமாக அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தெரிந்து கொண்டு அதை பயன்படுத்துவதை தெரிந்து கொண்டு அதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டுக்கு நல்லதொரு தலைமை தேவைப்படுகின்றது. முதியவர்களாக இருக்கும் அனைவரும் அடுத்த தலைமுறைக்கு அதாவது இளைஞர்களுக்கு வாய்ப்பு கெடுக்க வேண்டும். வாய்ப்பு கொடுக்க வேண்டுமே தவிர அந்த வாய்ப்பை கெடுக்கும் இடைஞ்சலாக ஒரு போதும் இருக்க கூடாது. கல்லூரி மாணவர்கள் அனைவரும் அரவணைத்துக் செல்ல வேண்டும்.
சனாதனம் குறித்து பேசியதற்காக ஒரு சிறிய பிள்ளையை போட்டு தர்ம அடி அடிக்கக்கூடாது. அவர்கள் தாத்தா காலத்திலேயே இதுகுறித்து பேசியவர்கள்.
மத்திய அரசு எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களின் வசதிக்கு ஏற்ப தேர்தலை அறிவிக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். எதிர் வரவுள்ள தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு தகுதியாகவும், தயாராகவும் இராக்கிறோம்” என்று அவர் கூறினார்.