நிகழப்போகும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் 2023 : அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!
வரும் அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை, மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இதனையடுத்து, வரும் அக்டோபர் 28ம் தேதி பவுர்ணமி அன்று சந்திர கிரகணமும் நிகழப்போகிறது.
சூரிய கிரகணம் அக்டோபர் 14ம் தேதி இரவு 8.34 மணி தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை நிகழும். ஆனால், இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது. வரும்
அக்டோபர் 28ம் தேதி சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.31 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 3.56 மணி வரை நீடிக்கும். இதை நம் கண்களால் தெளிவாக பார்க்கலாம்.
இந்த இரு கிரகணங்கள் நிகழ்வதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –
மிதுனம்
சூரியன் கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் நிகழப்போவதால் மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. உங்கள் நிதிநிலை சீராக இருக்கும். வேலை வாய்ப்பு உங்கள் தேடி வரும். தொழில் சிறக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள். சமூகத்தில் மரியாதை கூடும். உங்களின் நிதி ஆதாயங்கள் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சூரியன் கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் நிகழப்போவதால் சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு பலன்கள் கிடைக்கப்போகிறது. நல்ல அதிர்ஷ்டம் பிறக்கப்போகிறது. பொறுப்புகள் கூடும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழில் பலப்படும். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுப்பெறும்.
துலாம்:
சூரியன் கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் நிகழப்போவதால் துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் பிறக்கும். உங்களின் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களின் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுப காரி
யங்கள் நடக்கும்.