முன்னோர்கள் கோபம் துரத்தினால் நமக்கு என்ன நடக்கும்ன்னு தெரியுமா?
பித்ரு பக்ஷம் என்பது முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் 16 நாட்களைத்தான் பித்ரு பக்ஷம் என்று சொல்கிறார்கள்.
பித்ரு பக்ஷம் நாட்களில் நம் முன்னோர்கள் நம்மைத் தேடி பூமிக்கு வருவார்களாம். அப்போது, அவர்களது சந்ததியினர் அவர்களை திருப்திப்படுத்தினால் நன்மை கிடைக்குமாம். ஆனால், பித்ரு பக்ஷம் நாட்களில் திருமணம், நிச்சயதார்த்தம், சடங்குகள் செய்யமாட்டார்கள்.
பித்ரு பக்ஷ நாட்களில் தம் முன்னோர்களுக்கு உணவு, உடைகள், அவர்களுக்கு பிடித்த பொருட்களை அவர்களை நினைத்து பிரார்த்தனை செய்து வழங்குவார்களாம். அதேபோல், மக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து ஏழைகளுக்கு உணவு ஆடைகளை தானமாக கொடுப்பார்கள்.
பித்ரு பக்ஷ நாட்களில் புதிதாக ஆடைகளை வாங்கக்கூடாதாம். உணவு தானம் செய்தால் நம் முன்னோர்கள் மகிழ்ந்து அடைவார்களாம். அவர்கள் இந்த நாட்களில் வரும்போது நீங்கள் அவர்களைத் திருப்திப்படுத்தாவிட்டால் அவர்கள் உங்கள் மேல் கோபப்படுவார்கள்.
இப்படி இறந்த முன்னோர்களை கோபப்படுத்தினால், அது நம் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். தொழில், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பண நெருக்கடியை சந்திக்க கூடும்.
பித்ரு பக்ஷ நாட்கள் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் சடங்குகளைச் செய்பவர்கள். இதனால் முன்னோர்கள் திருப்தியடைவார்களாம்.
இந்தக் காலத்தில் தம் முன்னோர்களை மதிக்காவிட்டால் பித்ரு தோஷம் ஏற்படுமாம்.
பித்ரு பக்ஷ நாட்களில் புதிய ஆடைகளை வாங்கக்கூடாது. வீடு, மனை, பிளாட், புதிய கார்கள் வாங்கலாம். பித்ரு பக்ஷ நாட்களில் புதிய வேலையோ, புதிய பொருட்களை வாங்கக் கூடாது என்பது தவறான கருத்து.
வரும் 29-ம் தேதி பெளர்ணமி வருகிறது. பித்ரு பக்ஷ அக்டோபர் 14ம் தேதி சர்வ பித்ரு அமாவாசையன்று முடிகிறது. அன்று அனைத்து முன்னோர்களின் சிரார்த்தம் நடைபெறுமாம்.