கலப்படமில்லாத பெருங்காய பொடி வீட்டிலேயே தயாரிக்கலாம்.. இதோ முழுமையான விளக்கம்!

0
29
#image_title

கலப்படமில்லாத பெருங்காய பொடி வீட்டிலேயே தயாரிக்கலாம்.. இதோ முழுமையான விளக்கம்!

கட்டி பெருங்காயம் பயன்படுத்துவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். அதை சிலருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. பெரும்பாலோர் பெருங்காய பொடியைத்தான் பயன்படுத்துவார்கள்.

ஆனால், கடையில் பெருங்காயம் பொடி வாங்கும்போது, இதனுடன் வேறு சில பொருள்களை சேர்த்து விடுவார்கள். இதனால் இதன் நறுமணம் வேறு மாதிரியாக இருக்கும்.

கவலை வேண்டாம்… பெருங்காயத்தை எப்படி வீட்டிலேயே பொடி செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

கட்டி பெருங்காயம் – 100 கிராம்

உப்பு – கால் டீஸ்பூன்

செய்முறை

முதலில் கடினமாக கட்டி பெருங்காயத்தை உரலில் இடித்து கொள்ள வேண்டும்.

இரும்பு கடாயில் மிதமான தீயில் உடைத்த கட்டி பெருங்காயத்தை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

பெருங்காயம் லேசான மஞ்சள் நிறமாக மாறும்போது, அதன் மேல் வெள்ளை புள்ளிகளாய் வரும். அப்போது, அடுப்பை அணைத்து விட வேண்டும்.

வாணலியில் உப்பை சேர்த்து இலேசாக வறுத்து, பிரித்த பெருங்காய துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து பொடியாக்கினால் பெருங்காய பொடி ரெடி. அதை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்தால் நல்லது.

author avatar
Gayathri