வேகமாக உடல் எடை குறைக்க வேண்டுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..

0
24
#image_title

வேகமாக உடல் எடை குறைக்க வேண்டுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க…

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்யணும்ன்னு அவசியம் கிடையாது. காலையில் சற்று கடினமாகவும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் சின்ன உடற்பயிற்சி செய்தால் போதும். உங்களுடைய சின்ன சின்ன முயற்சி கூட உடல் எடையை இழக்கச் செய்யும்.

சரி வாங்க இரவு நேரத்தில் உடல் எடையை குறைக்க என்னென்னலாம் செய்யலாம் என்று பார்ப்போம் –

தண்ணீர்

இரவு தூங்கச் செல்லும் போது நிறைய தண்ணீர் குடிக்காதீர்கள். அப்படி குடித்தீர்கள் என்றால் தூக்கம் கெட்டுப்போகும். ஆதலால், படுக்கைக்கு செல்வதற்கு முன் தண்ணீர் குடிப்பதை முற்றிலும் தவிர்த்து விடுதல் நல்லது.

தூங்கச் செல்ல அரை மணி நேரத்திற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் போதும். அது உங்களுடைய உடல் நீர்ச்சத்தோடு வைத்திருக்கும்.

தண்ணீர் குடிப்பதன் மூலம், உங்கள் கழிவுகள் உங்கள் உடலிலிருந்து வெளியேறி உடல் சுத்தமாவதுடன், மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால், உடல் எடை நாளடைவில் குறையும்.

உடற்பயிற்சி

சிலர் காலை தூங்கி எழுந்ததும் உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால், காலையிலிருந்து உடற்பயிற்சி மற்றும் வேலை பார்த்துவிட்டால் உடல் சோர்வாகிவிடும். அதனால், மாலை நேரத்தில் உடற்பயிற்சி சிறிது நேரம் செய்ய பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், மன அழுத்தம் குறைந்து உடல் எடை கணிசமாக குறையும்.

யோகாசனம்

இரவு நேரத்தில் சிலருக்கு தியானம் செய்யும் பழக்கம் இருக்கும். இரவு சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் யோகாசனங்கள் செய்வது நல்லது. மாலையில் யோகாசனங்கள் செய்தால் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு கட்டுப்படும். உடல் எடையும் குறையும்.

ஸ்நாக்ஸ்

டயட்டில் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டில் தீவிரம் காட்ட வேண்டும். உடல் குறைக்க விரும்புகிறவர்கள் சிப்ஸ், பிரட், பிஸ்கட் தீனி எடுத்துக் கொள்வார்கள். இதை முற்றிம் தவிர்த்து விட வேண்டும். கலோரிகளை குறைத்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

ஹெர்பல் டீ

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இரவு படுக்கச் செல்லும் முன் பாலை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல மலச்சிக்கல் உள்ள பிரச்சனை உள்ளவர்களும் இரவில் பால் அருந்தக்கூடாது. இஞ்சி, புதினா, துளசி, பட்டை, போன்ற மூலிகை கொண்ட டீயை குடிககலாம். இது நரம்பு மண்லத்தை படுப்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

மொபைல் பார்ப்பது

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், படுக்கச் செல்ல 2 மணி நேரத்திற்கு முன் செல்போன், டிவி பார்ப்பதையும் நிறுத்த வேண்டும். டிவி, செல்போன் பார்த்தால், உங்கள் ஹார்மோன்களின் சமநிலை பிரச்சினை ஏற்பட்டு, அதுவே பருமனை கூட்டிவிடும்.

இரவு உணவு

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவு நேரத்தில் அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது.

இரவு உணவை நடுராத்திரியில் எடுத்துக் கொள்ளக்கூடாது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவு உணவை இரவு 7 மணிக்கு முன்பாகவே சாப்பிட வேண்டும்.

இந்த விஷயங்களை சரியாக பின்பற்றினாலே உங்கள் உடல் எடையை குறையும்.

 

author avatar
Gayathri