வெள்ளை முடியை அடர் கரு நிறத்திற்கு மாற வைக்கும் அதிசய ஹேர் டை!! இயற்கை முறையில் 100% ரிசல்ட் உண்டு!
இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது.இதற்கு வாழ்க்கை முறையும்,உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம்.என்னதான் முகம் இளமை தோற்றத்தில் இருந்தாலும் ஒரு முறை வெள்ளை முடி எட்டி பார்த்து விட்டதென்றால் போதும் மொத்த அழகும் குறைந்து விடும்.இதற்காக ரசாயன பொருட்களை பயன்படுத்தும் முடிவை கை விட்டு இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி முடியை கருமை நிறத்திற்கு மாற்ற முயற்சி செய்யுங்கள்.உணவில் சத்தான காய்கறிகள்,பழங்கள்,நட்ஸ் ஆகியவற்றை எடுத்து வருவதினால் உடலுக்கும்,கூந்தலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்த்து வாரத்திற்கு 2 முறை மட்டும் அதனை செய்யுங்கள்.தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.இது போன்று செய்வதால் இளநரை பாதிப்புகள் ஏற்படாது.
தேவையான பொருட்கள்:-
*இண்டிகோ பவுடர் – 3 தேக்கரண்டி
*மருதாணி இலை பவுடர் – 3 தேக்கரண்டி
* கார்ன் ப்ளார் – 2 தேக்கரண்டி
*உப்பு – 1 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
செய்முறை:-
1.முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் வீட்டில் செய்து வைத்துள்ள அல்லது கடையில் வாங்கிய மருதாணி பொடியை சேர்த்து 2 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு மற்றும் சம அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து காற்று புகாத வண்ணம் ஒரு மூடி கொண்டு மூடவும்.
2.மறுநாள் காலையில் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட் மீது சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து அவற்றை வெள்ளை முடி மற்றும் வேர் பகுதிகளில் படுமாறு அப்ளை செய்ய வேண்டும்.அதிகபட்சம் 3 மணி நேரம் வரை வைத்திருந்து வெறும் தண்ணீர் மட்டும் கொண்டு தலையை அலச வேண்டும்.
3.பின்னர் தலைமுடி நன்கு காய்ந்த பிறகு ஒரு சிறிய பவுல் எடுத்து அதில் இண்டிகோ பவுடர் (அவுரி),3 பின்ச் அளவு உப்பு மற்றும் 2 தேக்கரண்டி அளவு கார்ன் ப்ளார் உள்ளிட்டவற்றை மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.
4.இந்த பேஸ்டை தலையில் அப்ளை செய்து 2 மணி நேரத்திற்கு பின்னர் வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி முடியை அலசவும்.ஷாம்பு,சீயக்காய் உள்ளிட்ட எவற்றையும் உபயோகிக்க கூடாது.
5.அடுத்த நாள் தலைக்கு நல்லெண்ணெய் மட்டும் வைத்து குளிக்கவும்.இவ்வாறு செய்தால் இயற்கையாகவே முடி கருப்பாக மாறி விடும்.