ஆப்பிள் பழத்தில் ஒளிந்துள்ள ஆபத்து!! இப்படி செய்து சாப்பிட்டால் இந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடும்!!

0
71
#image_title

ஆப்பிள் பழத்தில் ஒளிந்துள்ள ஆபத்து!! இப்படி செய்து சாப்பிட்டால் இந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடும்!!

பழங்களின் ராஜா என்று சொல்லப்படும் ஆப்பிள் பார்ப்பதற்கு அழகாகவும்,சுவையாகவும் இருப்பதினால் அனைவரும் விரும்பி உண்டு வருகிறோம்.என்னதான் இதன் விலை அதிகம் என்றாலும் மக்களுக்கு ஆப்பிள் மீது இருக்கும் ஈர்ப்பு மட்டும் குறையவில்லை.இதில் அதிகளவு வைட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதினால் அவை பல வகைகளில் நம்மை தரக்கூடியவையாக இருக்கின்றது.ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என்று சாப்பிட்டு வந்தால் மூளை செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பு,ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள உதவுகிறது.ஆனால் இவற்றை ஜூஸ் செய்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்பது போல ஆப்பிள் பழத்தில் சில தீமைகளும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.சுவை,வாசனை என்று அனைத்திலும் சிறந்த பழமாக விளங்கும் ஆப்பிளில் அதிகப்படியான சர்க்கரை இருப்பதினால் ஒரு நாளைக்கு 1 ஆப்பிள் என்று எடுத்து கொள்வது நல்லது.இதனை பழமாக உண்பதினால் மட்டுமே உடலுக்கு தேவையான பலன் கிடைக்கும்.இவற்றில் ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு பாதிப்பு தான் உண்டாகும்.

ஆப்பிள் பழத்தால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்:-

1.ஆப்பிள் பழத்தில் அதிகப்படியான சர்க்கரை இருப்பதினால் இவற்றை அதிகமாகவோ அல்லது ஜூஸ் செய்தோ சாப்பிட்டு வந்தோம் என்றால் விரைவில் நீரிழிவு நோய் பாதிப்பை உண்டாகி விடும்.

2.ஆப்பிள் பழம் சுவையாக இருக்கிறது என்ற காரணத்தினால் ஒரு நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பழங்களை உண்டோம் என்றால் செரிமானக் கோளாறு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

3.இந்த பழத்தை கொண்டு அடிக்கடி ஜூஸ் செய்து சாப்பிட்டால் பற்சிதைவுகள் உண்டாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

4.ஆப்பிள் ஜுஸில் அதிகளவு கலோரிகள்,கார்போஹைட்ரேட் இருப்பதினால் இவை இதயத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

5.ஆப்பிளில் அதிகளவு நார்ச்சத்து அடங்கி இருக்கிறது ஆனால் அதை ஜுஸாக மாற்றும் பொழுது நார்ச்சத்து முழுமையாக நீங்கி விடுவதால் அவற்றை குடிப்பதினால் செரினா பாதிப்பு,வயிறு வீக்கம் போன்றவை உண்டாகும்.

6.உடல் எடை குறைய ஆப்பிள் சிறந்த தீர்வு என்றாலும் அவற்றை ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்க செய்யும் என்பது நிதர்சனம்.

7.உடல் ஆரோக்கியத்திற்கு அதிகளவு கேடு விளைவிக்கும் ஆர்செனிக் என்ற பொருள் ஆப்பிள் ஜுஸில் நிறைந்து காணப்படுகிறது.

8.ஆப்பிள் பழத்தில் அதிக விளைச்சல் காண விவசாயிகள் ‘diphenylamine’ என்ற வேதிப்பொருளை அதிகளவில் உபயோகிக்கின்றனர்.இந்த ‘diphenylamine’ என்ற வேதிப்பொருளில் கொடிய நோய்களில் ஒன்றான கேன்சரை உருவாகும் கார்சினோஜெனை அதிகளவு கொண்டிருப்பதால் ஆப்பிள் பழங்கள் ஆபத்து நிறைந்த பழங்களாக மாறி விடுகின்றன.இவ்வாறு விளைவிக்கப் படும் ஆப்பிள் பழங்களை விற்பனை செய்ய ஐரோப்பா,யூனியன் அமைப்பு தடைவித்து இருக்கின்றது.