சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி!!! 16 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி!!!

0
119
#image_title

சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி போட்டி!!! 16 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி!!!

தற்பொழுது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஹாக்கி விளையாட்டில் சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

சீனாவில் ஹாங்சோங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 23ம் தேதி துவக்க விழாவுடன் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இதில் ஹாக்கி போட்டி பிரிவில் இன்று(செப்டம்பர்26) இந்திய ஹாக்கி அணியும் சிங்கப்பூர் ஹாக்கி அணியும் மோதியது.

தொடக்கம் முதலே இந்திய ஹாக்கி அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆரம்பம் முதலே இந்திய ஹாக்கி அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடி வந்ததால் ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய ஹாக்கி அணி 6-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

முதல் பாதியில் இந்திய ஹாக்கி அணியின் மந்தீப் சிங் இரண்டு கோல்கள் அடித்தார். மேலும் குர்ஜந்த், லலித், விவேக், சுமித் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோல் அடிக்க இந்தியா 6-0 என்ற கணக்கில் முதல் பாதி ஆட்டத்தில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இந்திய ஹாக்கி அணி சிங்கப்பூர் ஹாக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. தெரிந்து அதிரடியாக விளையாடி வந்த இந்திய ஹாக்கி அணி மூன்றாவது காலிறுதியில் ஐந்து கோல்களை அடித்து மேலும் ஆதிக்கத்தை செலுத்தியது.

இந்திய ஹாக்கி அணியில் மொத்தம் ஒன்பது வீரர்கள் கோல் அடித்து இந்திய ஹாக்கி அணிக்காக தங்களின் பங்களிப்பை கொடுத்தனர். இதையடுத்து ஆட்டநேர முடிவில் இந்திய ஹாக்கி அணி 16 கோல்கள் அடித்தது. விடாமுயற்சியுடன் விளையாடிய சிங்கப்பூர் ஹாக்கி அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதனால் இந்திய ஹாக்கி அணி 16-1 என்ற கணக்கில் சிங்கப்பூர் ஹாக்கி அணியை வீழ்த்தியது.

இந்திய ஹாக்கி அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நான்கு கோல்களை அடித்தார். மேலும் மந்தீப் சிங் அவர்கள் தொடர்ந்து கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

Previous article144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!!
Next articleவிரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி எஸ்23 FE!!! இணையத்தில் லீக்கான புதிய தகவல்கள்!!!