ஹோட்டல் ஸ்டைல் பொட்டு கடலை சட்னி!! அடடா என்ன ஒரு சுவை!!
தென்னிந்திய உணவு வகைகளில் சட்னி முக்கிய இடத்தை வகிக்கிறது.இதில் வேர்க்கடலை, தக்காளி,பொட்டுக்கடலை,காரச்சட்னி என்று பல வகைகள் உள்ளது.இந்த சட்னி வகைகள் இட்லி,தோசை,சப்பாத்தி மற்றும் பணியாரத்திற்கு ஏற்ற சைடிஷ் ஆகும்.சாதத்திற்கு குழம்பு இல்லாமல் வெறும் சட்னி மட்டும் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
இதில் உள்ள இன்னொரு சிறப்பு என்னெவென்றால் குறைந்த நேரத்தில் சமைத்து விட முடியும் என்பது தான்.இந்நிலையில் நம் வீடுகளில் அடிக்கடி செய்ய கூடிய சட்னி என்றால் அவை பொட்டுக்கடலை சட்னி தான்.காரணம் உடனடியாக செய்து விட முடியும்.மற்றும் ருசி தாறுமாறாக இருக்கும் என்பது தான்.இந்த பொட்டுக்கடலை சட்னி வெண்பொங்கல்,ரவை உள்ளிட்ட உணவுகளுக்கும் ஏற்ற ஒரு காமினேஷன் தான்.
தேவையான பொருட்கள்:-
*பொட்டு கடலை – 1 கப்
*தேங்காய் – 2 தேக்கரண்டி(துருவியது)
*பச்சை மிளகாய் – 4
*கருவேப்பிலை – 1 கொத்து
*இஞ்சி – சிறு துண்டு
*சின்ன வெங்காயம் – 1
*கொத்தமல்லி இலை – சிறிதளவு
*எண்ணெய் – 2 தேக்கரண்டி
*கடுகு,உளுந்து – 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*காய்ந்த மிளகாய் – 2
*கடலை பருப்பு – 1/4 தேக்கரண்டி
செய்முறை:-
1.ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டு கடலை 2 காப்,பச்சை மிளகாய்,துருவிய தேங்காய்,சின்ன வெங்காயம்,இஞ்சி,கொத்தமல்லி தழை சேர்த்து தண்ணீர் விடாமல் பொடியாக அரைக்கவும்.
2.பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு முறை அரைக்கவும்.
3.இதனை ஒரு பவுலுக்கு மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
4.அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கடுகு,உளுந்து மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொரியும் வரை விடவும்.இதையடுத்து கருவேப்பிலை கிள்ளி வைத்துள்ள 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வதங்கியதும் அவற்றை தயார் செய்து வைத்துள்ள சட்னியில் கலந்து கொள்ளவும்.இந்த முறையில் செய்தால் பொட்டுக்கடலை சட்னி சுவையாக இருக்கும்.