எப்படி செய்தாலும் இட்லி கல்லு போன்று இருக்கிறதா? அப்போ இந்த முறையை பாலோ செய்து பாருங்கள்.. பஞ்சு போல் இருக்கும்!!

0
26
#image_title

எப்படி செய்தாலும் இட்லி கல்லு போன்று இருக்கிறதா? அப்போ இந்த முறையை பாலோ செய்து பாருங்கள்.. பஞ்சு போல் இருக்கும்!!

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று இட்லி.இவை அனைவருக்கு விருப்பமான உணவாக இருந்து வருகிறது.வீடு,ஹோட்டல் என்று இட்லி இல்லாத இடமே இல்லை.ஆவியில் வேகவைத்து உண்ணப்படும் இந்த உணவு உடலுக்கு மிகவும் நல்லது.உடம்பு சரி இல்லையென்றால் கஞ்சிக்கு அடுத்து மருத்துவர் நமக்கு பரிந்துரைப்பது இட்லி தான்.அரசி மற்றும் உளுந்தை ஊற போட்டு மாவாக அரைத்து அவற்றை புளிக்க வைத்து செய்யும் இந்த இட்லி,தோசை சாப்பிடுவதற்கு செம்ம டேஸ்டாக இருக்கும்.

மேலும் நம் வீடுகளில் செய்யப்படும் இட்லியை விட உணவகங்களில் செய்யப்படும் இட்லி பஞ்சு போன்று சாப்டாக இருக்கும்.இதற்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில பொருட்களை உணவகங்கள் சேர்க்கிறது என்ற குற்றச்சாட்டு அனைவரின் மத்தியிலும் எழுந்தாலும் அவற்றின் சுவையால் அதனை நாம் பெரிது படுத்துவதில்லை.இந்த மாதிரி சுவையாக,பஞ்சு போன்ற இட்லி கடைகளில் மட்டும் தான் செய்ய முடியும் என்று நினைத்து கொண்டிருக்கும் உங்களுக்கான டிப்ஸ் தான் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.இதன்படி செய்தால் ஆரோக்கியமான அதே சமயம் பஞ்சு போன்ற இட்லியை சுட்டு சாப்பிட முடியும்.

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி – 4 கப்

உளுந்து – 1 கப்

சோயா பீன்ஸ் – 2 தேக்கரண்டி

வெந்தயம் -1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

மாவு அரைக்கும் முறை:

1.முதலில் 2 பாத்திரங்கள் எடுத்து இட்லி அரிசி மற்றும் உளுந்தை தனி தனியாக தண்ணீர் ஊற்றி சுமார் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

2.அதேபோல் ஒரு பவுல் எடுத்து அதில் சோயா பீன்ஸ் மற்றும் வெந்தயத்தை ஒன்றாக ஊறவைக்க வேண்டும்.

3.அரிசி மற்றும் உளுந்து ஊறி வந்த பிறகு அதனை 3 முதல் 5 முறை நன்கு கழுவிக் கொள்ளவும்.

4.ஒரு கிரைண்டரில் சோயா பீன்ஸ் மற்றும் வெந்தயத்தை சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும்.

5.அவை அரைப்பட்ட பின்னர் உளுந்தை தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி அதில் போட வேண்டும்.

6.மாவு கிரைண்டரில் அரைபட்டு கொண்டிருக்கும் வேளையில் அவ்வப்போது சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

7.பின்னர் அரைத்த உளுந்த மாவு கையில் ஒட்டாத அளவுக்கு வந்தவுடன் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.

8.பிறகு அதே கிரைண்டரில் இட்லி அரிசியை போட்டு நன்றாக மைய்ய அரைக்க வேண்டும். அவ்வப்போது தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.பிறகு அரசி நன்கு அரைபட்டு மாவு பதத்திற்கு வந்ததும் அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் கலந்து கொள்ள வேண்டும்.

9.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கைகளால் மாவை நன்கு கலக்கவும்.இவ்வாறு செய்தால் மாவு நன்றாக புளித்து வந்துவிடும்.

10.அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.பிறகு இட்லி தட்டில் ஒரு ஈரமான காட்டன் துணி வைத்து அதில் அரைத்து வைத்துள்ள மாவை ஊற்ற வேண்டும்.7 முதல் 10 நிமிடங்கள் காத்திருந்து இட்லி வெந்ததும் அவற்றை ஒரு ஹாட் பாக்ஸ்க்கு மாற்றி விடவும்.

இந்த பஞ்சு போன்ற இட்லிக்கு பருப்பு சாம்பார்,இட்லி பொடி,சட்னி உள்ளிட்டவை சிறந்த காமினேஷன்.