தெருவே கமகமக்கும் ரசம்! இப்படி வச்சு அசத்துங்கள்!!
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிப்பது ரசம் தான்.இந்த ரசம் திரவ வடிவில் இருப்பதினால் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது.ரசத்தில் மட்டும் புளி ரசம்,தக்காளி,மிளகு ரசம் என்று பல வகைகள் இருக்கிறது.ரசம் செரிமான பிரச்சனைக்கு உரிய தீர்வாக இருக்கிறது.சளி பிடித்தவர்கள் மிளகு ரசம் அல்லது தூதுவளை ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும்.
அசைவ உணவு சாப்பிட பிறகு 1 டம்ளர் ரசம் குடிப்பதை நம்மில் பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டிருக்கிறோம்.இந்த பழக்கம் நல்லது தான்.ரசம் செய்ய நாம் பயன்படுத்தும் பூண்டு,மிளகு ,சீரகம் உள்ளிட்ட பொருட்கள் நம் உடலுக்கு ஏகப்பட்ட பலன்களை அள்ளி கொடுக்கின்றன.பல்வேறு உணவுகளை தவிர்த்தாலும் நம்மில் பெரும்பாலானோர் விருப்ப உணவுகளில் ரசம் முக்கிய இடத்தை பெற்று இருக்கிறது.இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த ரசத்தை மணமாகவும்,மிகவும் சுவையாகவும் வைக்கும் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த முறையில் செய்து பாருங்கள் ரசம் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*புளி – பெரிய எலுமிச்சை பழ அளவு
*மிளகு – 1 ஸ்பூன்
*சீரகம் – 1 ஸ்பூன்
*பூண்டு – 10 பற்கள்
*வர மிளகாய் – 2
*சின்ன வெங்காயம் – 10
*உப்பு – தேவையான அளவு
*கருவேப்பிலை – 2 கொத்து
*கொத்தமல்லி தழை – சிறிதளவு
*எண்ணெய் – 2 தேக்கரண்டி
*கடுகு – 1/2 தேக்கரண்டி
*உளுந்து பருப்பு – 1/4 தேக்கரண்டி
*கடலை பருப்பு – 1/4 தேக்கரண்டி
*தக்காளி – 1 பெரியது
*பச்சை மிளகாய் – 3
*பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் புளி சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
2.ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம்,மிளகு,பூண்டு,கருவேப்பிலை ஒரு கொத்து,வரமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
3.பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுது,ஊற வைத்துள்ள புளி கரைசல் சேர்த்து கொள்ளவேண்டும்.அதில் ஒரு தக்காளி பிளந்து கொள்ள வேண்டும்.
4.அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
5.அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
6.பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதில் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
7.கொதி வருவதற்கு முன்னர் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
8.ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து அதில் மணத்திற்காக கொத்தமல்லி தழைகளை சேர்த்து ஒரு தட்டு கொண்டு மூடி விடவும்.