உங்கள் நகங்களை அழகாக வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்!

0
26
#image_title

உங்கள் நகங்களை அழகாக வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்!

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை உங்கள் நகத்தை வைத்தே சொல்லிவிடலாம்.

நம்முடைய உடம்பில் நகங்களில் தான் ரத்தம் ஓட்டம் இருக்காது. நகம் ‘ஆல்ஃபா கெரட்டின்’ என்ற புரதப் பொருளால் ஆனது. நகங்கள் அழகு மட்டுமல்ல, நமக்கு இருக்கும் நோய்களையும், ஆரோக்கியத்தையும் பிரபலிக்கும். நகங்களில் ஏற்படும் அறிகுறியை வைத்து நம்முடைய நோயை கண்டுபிடித்து விடலாம்.

சரி வாங்க… எப்படி நம்முடைய நகங்களை ஆரோக்கியமாக, அழகாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ் பார்ப்போம் –

நம்முடைய விரல்களை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

நகங்களில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கை நகங்களை கடிக்கக்கூடாது.

நகங்கள் மூலம் கிருமிகள் நம்முடைய வாய் வழியாக சென்று உடம்பில் நோய்களை உண்டாக்கிவிடும்.

கெமிக்கல் இல்லாத இயற்கையாக பொருட்களை வைத்து நகங்களை சுத்தம் செய்யலாம்.

கெமிக்கலை கலக்கும்போது, கைகளில் கையுறைகளை கட்டாயம் அணியவேண்டும்.

அடிக்கடி பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பாலிஷுக்குப் பதிலாக மாய்ச்சுரைசரை பயன்படுத்தலாம்.

டப்பாக்களைத் திறக்க நகங்களைப் பயன்படுத்த வேண்டாம். இதனால் நகங்களில் வலிகள் ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கும்.

நீளமாக நகங்களை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால், பல காயங்கள் ஏற்படும்.

பிளேடு, கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றை கொண்டு நகங்களை வெட்டக்கூடாது.

நகங்களின் நிறத்தில் திடீரென மாற்றம் இருந்தால், உடனடியாக மருத்துவரிட

ம் செல்ல வேண்டும்.

author avatar
Gayathri