லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்த படக்குழு!!! காரணம் இது தான்!!!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதற்கான காரணத்தையும் படக்குழு கூறியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் மகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி இருக்கின்றது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30 தேதி நடைபெறும் என்று தகவல்கள் பரவி வந்த நிலையில் இசை வெளியீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லியோ இசை வெளியீட்டு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் “பாதுகாப்பு காரணங்கள் கருதியும் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கு அதிக டிக்கெட்டுகள் கேட்கப்படுவதால் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப லியோ திரைப்படத்தின் அப்டேட்டுகளை அடிக்கடி கெடுக்க போகின்றோம். பலரும் நினைப்பது போலீஸ் வேறு எந்த அரசியல் அழுத்தங்களுக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் அதாவது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கு ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் அனுமதி வழங்கவில்லை என்ற செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.