494 வது நாளாக மாற்றம் இல்லாமல் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்!!! இன்றைய விலை நிலவரம் என்ன!!?

0
30
#image_title

494 வது நாளாக மாற்றம் இல்லாமல் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல்!!! இன்றைய விலை நிலவரம் என்ன!!?

சென்னையில் 494வது நாளாக இன்றும்(செப்டம்பர்27) பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்கப்பட்டு வருகின்றது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது சர்வதேச சந்தையை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றது. அதாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் அதிகபட்சமாக விற்கப்பட்ட விலையாக இருந்தது.

அதன் பிறகு தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பல நாட்களாக ஒரே விலையில் விற்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த மே 2022ம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசானது பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 9 ரூபாய் குறைத்துக் கொள்வதாக முடிவு செய்துள்ளதாகவும் மேலும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைத்துக் கொள்வதாக முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.22 ரூபாய் குறைந்து 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் டீசல் லிட்டருக்கு 6.70 ரூபாய் குறைந்து 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து பெட்ரோல் விலை இன்று(செப்டம்பர்27) லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 494வது நாளாக மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.